ஆசிரியர் திரு. பாரதன் அவர்கள் கம்பம், தேனி பகுதிகளின் இலக்கிய வட்டாரங்களில் நன்கு அறியப்பட்டவர். கடந்த 30 ஆண்டுகளாக பாரதி தமிழ் இலக்கியப் பேரவையை தொடர்ந்து நடத்தி வருகிறார். ஆயிரக்கணக்கான பட்டி மன்றங்களில் நடுவராக நிகழச்சிகளை நடத்தியுள்ளார். பத்துக்கும் மேற்பட்ட இலக்கிய விருதுகளையும், மூன்று நூல்களுக்கு இலக்கிய அமைப்புகளிடமிருந்து பாராட்டுகளையும், பரிசுகளையும் பெற்றுள்ளார்.