கா. உதயசங்கர் (பிறப்பு: 1960) ஒரு தமிழக எழுத்தாளர் ஆவார். இவர் சிறுகதை, கவிதை, மொழிபெயர்ப்பு, சிறார் இலக்கியம், கட்டுரை போன்றவற்றை எழுதி வருகிறார்.[1] கோவில்பட்டி எழுத்தாளர்களான கி. ராஜநாராயணன், பூமணி, சோ. தர்மன், ச. தமிழ்ச்செல்வன், தேவதச்சன், கௌரிசங்கர், வித்யாசங்கர், கோணங்கி, நாறும்பூநாதன், உதயசங்கர், மாரீஸ், முருகபூபதி, அப்பணசாமி ஆகியோரைப் பற்றி எடுத்து வரும் ஒரே ஒரு ஊரிலே என்ற ஆவணப்படத்தை எடுத்து வருகிறார். இந்த ஆவணப்படத்தின் முன்னோட்டமாக எழுத்தாளர் அப்பணசாமியை பற்றிய ஆவணப்படம் 2016 பாண்டிச்சேரி சர்வதேச குறும்பட ஆவணப்படவிழாவில் திரையிடப்பட்டது