book

திருப்பதி மலை வாழும் வெங்கடேசா

Thirpathi Malai Vaalum Venkatesa

₹60+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :காஷ்யபன்
பதிப்பகம் :விகடன் பிரசுரம்
Publisher :Vikatan Prasuram
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :224
பதிப்பு :2
Published on :2004
குறிச்சொற்கள் :சரித்திரம், பொக்கிஷம், புராணம், பழங்கதைகள், தகவல்கள், தெய்வம், கடவுள், கோயில்கள்
Out of Stock
Add to Alert List

வரலாறு, மகத்துவம், தாத்பரியம் பற்றி எழுத முயற்சிப்பவர்கள், அதன் பொருள் உணர்ந்து எழுத முற்பட்டால், அந்தப் படைப்பு கலைப்பெட்டகமாகப் பல நூற்றாண்டுகளுக்கு ஒளி வீசித் திகழும்.
பக்தி மாரக்கத்துக்கும் அது நூற்றுக்கு நூறு பொருந்தும். அவள் விகடனில் ஸ்ரீ வெங்கடாஜலபதியின் கதையும் அப்படி ஒரு பொக்கிஷமாகத்தான் இடம் பெறத் துவங்கியது.

கலியுக தெய்வம் திருப்பதி ஏழுமலை வெங்கடேசனின் சரிதத்தை அவள் விகடனில் வெளியிட ஆரம்பித்ததுமே, அதற்கு மகத்தான வரவேற்பு கிடைத்தது. வெங்கடேசனின் ம‌கிமை புத்தம்புதிதாகச் சொல்லக்கூடிய ஒன்று இல்லைதான். ஆனால், திருப்பதி மலைக்குள் புகுந்து ஆராய முற்பட்டபோதுதான் எண்ணற்ற பக்தித் தகவல்கள், இதுவரை வெளியுலகத்தைப் பரவலாகத் தொடாமல், கடலுள் கிட‌க்கும் முத்துக்க‌ளைப் போல‌ ஆங்காங்கே சித‌றிக் கிட‌ப்ப‌து தெரிந்த‌து.

திருப்ப‌தி ம‌லையின் ப‌ல்வேறு இட‌ங்க‌ளுக்குச் சென்று, அந்த‌க் க‌தைக‌ளையெல்லாம் ப‌க்தி சிர‌த்தையோடு தேடி எடுத்து, சுவைமிக்க‌ எழுத்தோவிய‌மாக‌ வ‌டித்திருக்கிறார் காஷ்ய‌ப‌ன். தூரிகைச் சித்த‌ர் ஜெ.பி_யின் ஓவிய‌ங்க‌ள், புத்த‌க‌த்துக்கு மேலும் மெருகூட்டி அழ‌குக்கு அழ‌கு சேர்த்திருக்கின்ற‌ன‌.

'திருப்ப‌தி ம‌லை வாழும் வெங்க‌டேசா' புத்த‌க‌த்தைப் ப‌டித்து, நெஞ்ச‌ம் நிறைந்து முழுமை அடைவீர்க‌ள் என்றால், இந்த‌ப் புத்த‌க‌ம் வெளியிட்ட‌த‌ன் நோக்க‌ம் நிறைவேறிவிட்ட‌து என‌த் திருப்தி கொள்வேன்.