கி,மு. மூன்றாம் நூற்றாண்டு அல்லது நான்காம் நூற்றாண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்தவர்தான் வாத்ஸ்யாயனர். அவர்
காலத்திலேயே ப்ப்ரவ்யருடைய நூல் ஒன்று காமத்தைப் பற்றி இருந்தது. ஆனால். அது அவ்வளவு தெளிவாக இல்லை, செயல் முறை இளக்கங்கள் முறையாகத் தொகுக்கப்படவில்லை என்று கருதி வாத்ஸ்யாயனர் காமசூத்திரம் என்னும் நூலை காமத்திற்கு என்றே பிரத்யோகமாக இயற்றினார். தற்போது கிடைத்துக் கொண்டிருக்கும் நூல்களுக்கு எல்லாம் மூலமும் முதலும் இதுவே. தலை முடியிலிருந்து கால் நகம்வரை ஆண்டவன் கொடுத்த அற்புதப் பிறவிப் பரிசான மனிதனின் உணர்ச்சிப்பிரவாகங்கள். அதன் மூலம் உருவாகும் சந்ததிகள் , காலநேரம் சான்றோரின் அறிவுரைகள் இப்படி பல உரைகளை இந்நூலில் கூறியுள்ளேன். இம்மாதிரியான நூல்களையெல்லாம் சிலர் படிக்கத் தடைவிதிப்பதுண்டு. காரணம் அவர்களுக்கே இது பற்றித் தெரியாது. இவர்கள் ஏன் தெரிந்துக் கொள்ள வேண்டும் என்ற வக்கிர எண்ணமும் பொறாமையும் காரணமாக இருக்கலாம்.
- மானோஸ்.