-
உலகில் வாழும் அனைத்து மனித இனங்களும் சம உரிமை பெற்று வாழும் சுதந்திர உணர்வு படைத்தவை. ஆண்டான் _ அடிமை என்று பாகுபாடு இல்லாத உலகத்தைத்தான் அனைத்து இன மக்களும் விரும்புகின்றனர். உலகில் தோன்றிய மனித இனங்கள் ஒன்றுக்கொன்று சமம் அற்றவை என்ற சித்தாந்தம் ஆதிக்க இன மக்களிடம் வளர்ந்து, அந்த மனப்பான்மையே நிறவெறியாகவும் வளர்ந்தது. ஆப்பிரிக்காவிலும், அமெரிக்காவிலும் கறுப்பு இன மக்கள் அனுபவித்த கொடிய துயரங்கள் சொல்லி மாளாது. வெள்ளையர்களிடம் அடிமைப்பட்டுக் கிடந்த இந்தியா மட்டும் அல்லாமல், தென் ஆப்பிரிக்கா உட்பட உலகின் ஏனைய நாடுகளிலும் விடுதலைக்கு ஆதரவான குரல்கள் ஒலித்தன.
ஒவ்வொரு நாட்டிலும் தன்னலமற்ற தலைவர்கள் தோன்றி இன வெறிக்கு எதிராகப் போராடினார்கள். அந்த வகையில், ஆபிரகாம் லிங்கன், மார்ட்டின் லூதர்கிங் வழியில், அமெரிக்காவிலிருக்கும் கறுப்பு இன மக்களுக்கு விடிவெள்ளியாகத் தோன்றி, அங்கே அதிபர் வேட்பாளராக போட்டியிடும் தகுதிக்கு உயர்ந்திருக்கிறார் பாரக் ஒபாமா! கண்டங்களின் எல்லைகளைக் கடந்து உலகின் மூலை முடுக்கில் உள்ள மக்களின் இதயங்களைக் கவர்ந்துள்ள ஒபாமாவின் ஆற்றல், இயங்கும் வேகம் பற்றியும், கறுப்பு இன மக்கள் படிப்படியாக விழிப்பு உணர்ச்சி பெற்று தலைநிமிர்ந்த வரலாற்றையும் இணைத்து ‘ஆம்; நம்மால் முடியும்!’ என்ற தலைப்பில் ‘சங்கொலி’யில் வைகோ எழுதிய உணர்ச்சிமிக்க தொடர் கட்டுரைகளின் தொகுப்புதான் இந்நூல்.
‘அமெரிக்கக் குடியரசுத் தலைவராக ஒபாமா வெற்றி பெற்றால், அமெரிக்காவில் மட்டும் அல்ல... உலகில் எங்கெல்லாம் மக்கள் ஒதுக்கப்படுகிறார்களோ அங்கெல்லாம் ஒரு புதிய விடியல் உதயமாகும்’ என்ற நம்பிக்கை மேலோங்க, தனது வசீகரமான, புரட்சிகரமான புயல் நடையில் எழுதியிருக்கிறார், கடந்த ஜூலையில் ஒபாமாவை நேரில் சந்தித்துவிட்டு திரும்பிய வைகோ.
-
This book Aam;NammaalMudiyum! is written by Vaiko and published by Vikatan Prasuram.
இந்த நூல் ஆம்; நம்மால் முடியும்!, வைகோ அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.
Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Aam;NammaalMudiyum!, ஆம்; நம்மால் முடியும்!, வைகோ, Vaiko, Varalaru, வரலாறு , Vaiko Varalaru,வைகோ வரலாறு,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy Vaiko books, buy Vikatan Prasuram books online, buy Aam;NammaalMudiyum! tamil book.
|
அமெரிக்க அதிபர் ஒபாமா குறித்து ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ எழுதிய ‘ஆம்; நம்மால் முடியும்!’ என்ற புத்தகத்தை ‘விகடன் பிரசுரம்’ தமிழில் வெளியிட்டது. அதன் ஆங்கிலப் பதிப்பு வெளியீட்டு விழா டெல்லியில் கடந்த 30-ம் தேதி நடந்தது.
காஷ்மீரத்து ஃபரூக் அப்துல்லா தொடங்கி, பஞ்சாப் பிரகாஷ்சிங் பாதலின் மகன் வரை மொத்தமும் வட இந்தியத் தலைகளாகக் குவிந்து, வைகோவை வாழ்த்திக் குளிர்வித்தனர்.
டெல்லி கபூர்தலா இல்லத்தில் இந்த விழா நடந்தது. மத்திய காங்கிரஸ் அரசின் முக்கியக் கூட்டணிக் கட்சியான தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவரும், மத்திய மரபு சாரா எரிசக்தித் துறை அமைச்சருமான ஃபரூக் அப்துல்லாவும், இதற்கு எதிர்க் கூட்டணியான பி.ஜே.பி. அணியில் இருக்கும் அகாலி தளமும் இந்த மேடையில் ஒன்றாக இருந்தது, டெல்லி மீடியாக்களின் கண்ணை உறுத்தியது.
முன்னாள் நிதி அமைச்சரும் பி.ஜே.பி. தலைவர்களில் ஒருவருமான யஷ்வந்த் சின்ஹா பேசும்போது, ”இந்த விழாவில் நான் கலந்துகொண்டது, ஒபாமா மீதான மரியாதையால் அல்ல… வைகோ மீதான மரியாதையால்தான். வைகோ எதையும் செய்து முடிப்பார். இந்த விழாவுக்கு வடக்கில் இருந்து தெற்கு வரை, மேற்கில் இருந்து கிழக்கு வரை ஒட்டுமொத்த இந்தியாவும் வந்து உள்ளது. ஒபாமா வெள்ளை மாளிகையில் நுழைந்தது, சாதாரண விஷயம் அல்ல. ஆகவேதான் கறுப்பின மக்களின் சரித்திரத்தை வைகோ எழுதி இருக்கிறார். அமெரிக்காவில் மாற்றம் ஏற்பட 200 ஆண்டுகள் ஆனது. இப்போதும் அங்கு வேற்றுமைகள் உள்ளன. ஒபாமாவே இதை ஏற்றுக்கொள்கிறார். ‘வெள்ளை மாளிகை’ குறித்து அண்ணா எழுதிய கடிதங்களைப் படித்து, தான் எழுச்சி பெற்றதாகக் கூறுகிறார், வைகோ. உண்மையில், இந்தப் புத்தகத்தை அமெரிக்கர்கள் படித்தால், அவர்களுடைய மனநிலையில் நிச்சயமாக ஒரு மாற்றம் ஏற்படும்.” என்று சொல்லி முடிக்க… முன்னாள் ஹரியானா முதல்வர் ஓம்பிரகாஷ் சௌதாலா மைக் பிடித்தார்.
”எல்லோரும் ஆங்கிலத்தில் பேசினார் கள். ஒரு மாற்றத்துக்காக நான் இந்தியில் பேசுகிறேன். வைகோவுக்கும் பஞ்சாப் முதல்வர் பிரகாஷ்சிங் பாதலுக்கும் உள்ள நட்பு ஆழமானது, பலமானது. தேசம் சுதந்திரம் பெற்ற பின்னர் அடிக்கடி ஜெயிலுக்குப் போனவர்கள், இரண்டு பேர்கள். வடக்கே பிரகாஷ்சிங் பாதல்… தெற்கே வைகோ. இவர்களுக்கு இடையே மற்றொரு பொதுவான விஷயமும் இருக்கிறது. அதாவது, இவர்கள் இருவரும் எதையும் பேசத் தயங்குவது இல்லை. விளைவுகள் எது வந்தாலும் பயப்படுவதும் இல்லை. வைகோ, இலங்கைத் தமிழர்களுக்காகப் பேசிப் போராடினார். பாதலும் அவர் தரப்பு மக்களுக்காகப் பேசினார். இரண்டு பேரும் அடல் பிஹாரி வாஜ்பாயுடன் நட்புடன் இருந்தனர். வாஜ்பாய் பிரதமராக வர, நாங்கள் எல்லோரும் ஆதரவு கொடுத்தோம். அப்போது அவர்களுடைய வாக்கு எண்ணிக்கை குறைவாக இருந்தபோதிலும், நாங்கள் அவருக்கு மனப்பூர்வமாக ஆதரவு கொடுத்தோம். நாட்டை யார் ஆளவேண்டும் என்று நாங்கள் நினைத்தோமே தவிர… நானோ, வைகோவோ, பாதல் போன்றவர்களோ பதவிகளை அவரிடம் கேட்கவுமில்லை, பெற்றுக்கொள்ளவும் இல்லை. இப்போது வேறு காலம் நடக்கிறது. வைகோவின் புத்தகம் அமெரிக்காவில் உள்ள வெள்ளையர்கள்-கறுப்பர்களின் வேற்றுமையைப் போக்கும். பீகார் மக்கள், சாதியை எதிர்த்துத் தற்போது வாக்களித்து உள்ளனர். இதுபோன்ற புத்தகங்களைப் பார்த்து மக்கள் எழுச்சி அடைந்து, காங்கிரஸை நாட்டைவிட்டு அகற்ற வேண்டும்…” என்று பேசினார் ஓம்பிரகாஷ்.
பஞ்சாப் துணை முதல்வர் சுக்பீர் சிங் பாதல் அடுத்ததாக, ”என் அம்மா உடல்நிலை சரியில்லாமல் போனதால், எனது அப்பா பிரகாஷ்சிங் பாதல் நியூயார்க் போயிருக்கிறார். ஆனால், இன்றுகூட அவர் அங்கு இருந்து தொலைபேசியில் தொடர்புகொண்டு, ‘நீயும் மனைவியும் விழாவில் கலந்து கொள்கிறீர்கள்தானே?’ என கேட்டார். ரத்த சம்பந்தப்பட்ட உறவைவிட நட்பிலான உறவுக்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுப்பவர் எனது அப்பா. அதுவும் வைகோ என்றால், அவருக்கு ஒரு சகோதரரைப்போல. வைகோ எப்போது அழைத்தாலும் என் தந்தை போய்விடுவார். அது மாதிரிதான் வைகோவும்!” என்று நெகிழ்ச்சியாகச் சொன்னார்.
தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவரும் மரபுசாரா எரிசக்தித் துறை அமைச்சருமான ஃபரூக் அப்துல்லா, ”நான் ஆளும் கூட்டணியில் அங்கம் வகிக்கும் உறுப்பினர். இங்கு இருக்கிற பலர், எதிர் அணியான என்.டி.ஏ. அணியினர். இருந்தாலும் நான் ஏன் இங்கு வந்தேன்? காரணம், வைகோ என்கிற நண்பருக்காக! அவர் பல மேடுபள்ளங்களைப் பார்த்தவர். ஒருபோதும் வைகோ, தன் கொள்கையை விட்டுக்கொடுக்காதவர். அவர் வெளியே இருப்பதைவிட, சிறையில் இருந்தால்தான் மகிழ்வார். இப்போதும் அவர் போராடிக்கொண்டு இருப்பது, இலங்கைத் தமிழர்களின் உரிமைக்குத்தான்… அதுதான் அவரது லட்சியம்!” என்றவர், ”வைகோவை, நானும் 35 வருடமாகப் பார்க்கிறேன். இன்றும் அவர் இளமையாகவே இருக்கிறார். அந்த ரகசியம்தான் எனக்குப் புரிபடவே இல்லை..!” என்று ஜாலியாக ஒரு கமென்ட்டோடு முடித்தார்!
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ எழுதிய, “ஆம், நம்மால் முடியும்” என்ற நூலின் ஆங்கிலப் பதிப்பு நூல் வெளியீட்டு விழா டெல்லி மான்சிங் சாலையில் அமைந்துள்ள, பஞ்சாப் மாநில அரசுக்குச் சொந்தமான கபூர்தலா இல்லத்தில் நடைபெற்றது. விழாவுக்கு காஷ்மீர் மாநில முன்னாள் முதல்மந்திரி பரூக் அப்துல்லா, தலைமை தாங்கி நூலை வெளியிட்டு பேசினார்.
அப்போது, வைகோ ஒரு போராட்டக்காரர் என்றும், ஈழத் தமிழர்களுக்காக அவரது குரல் ஓங்கி ஒலிக்கிறது என்றும் கூறினார். பஞ்சாப் மாநில துணை முதல் மந்திரியும், சிரோமணி அகாலிதளம் கட்சியின் தலைவருமான சுக்பீர்சிங் பாதல், நூலின் முதல் பிரதியை பெற்றுக் கொண்டார். அரியானா மாநில முன்னாள் முதல் மந்திரியும், இந்திய தேசிய லோக்தளம் கட்சியின் தலைவருமான ஓம்பிரகாஷ் சவுதாலா வாழ்த்துரை வழங்கினார். அ.தி.மு.க. நாடாளுமன்றக் குழுத்தலைவர் தம்பிதுரை பாராட்டிப் பேசியபோது, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா அனுப்பி இருந்த வாழ்த்துச் செய்தியை வாசித்தார். விழாவில், மத்திய அரசின் முன்னாள் நிதி மந்திரி யஷ்வந்த் சின்ஹா, தெலுங்கு தேசம் கட்சியின் நாடாளுமன்றக்குழுத் தலைவர் நம நாகேஸ்வரராவ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ நன்றி உரையாற்றினார். முன்னதாக ம.தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் அ.கணேசமூர்த்தி, வரவேற்றுப் பேசினார். ம.தி.மு.க. கொள்கை விளக்க அணிச் செயலாளர் நாஞ்சில் சம்பத், விழா நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். நாடாளுமன்ற மாநிலங்கள் அவையின் முன்னாள் துணைத்தலைவர் டாக்டர் நஜ்மா ஹெப்துல்லா, ஆந்திர மாநில முன்னாள் முதல்மந்திரி என்.டி.ராமராவ் மகன் ஹரிகிருஷ்ணா எம்.பி. உள்பட பலர் கலந்து கொண்டனர்.