book

நினைவில் ஒரு மயிலிறகு

Ninaivil Oru Mayiliragu

₹75+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சுபா
பதிப்பகம் :முத்து நிலையம்
Publisher :Devi Veliyeedu
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :240
பதிப்பு :1
Published on :2012
Add to Cart

ஸ்கூலில் படிப்பு ஏறவில்லை. மேடை ஏறி இரண்டு முறை கப் வாங்கினான். வரிசையாகப் பத்திரிகைகளுக்குக் கதை அனுப்பி தோற்றான். சினிமாவுக்கு எழுத வேண்டியவன் பத்திரிகைகளுக்கு எழுதி நேரத்தை வீணடிக்கிறோமோ என்று, ஒரு அர்த்த ராத்திரியில் முடிவெடுத்து, மெட்ராஸ் கிளம்பி வந்து, அவலங்கள், ஸ்டூடியோக்களில் காக்கி சட்டை போட்ட கூர்க்காக்கள் ஃபைலோடு அவனைத் திருப்பினார்கள். டைரக்டர்கள் 'நாளைக்கு வாயேன்' என்று தினமும் சொல்லிக் விட்டார்கள். ஆனால் பாக்யநாத் தளரவில்லை. ஒரு 'பா' டைரக்டரை காலையும், மாலையும் அவர் ஷேவிங்கில் இருந்தாலும் சரி, ஷூட்டிங்கில் இருந்தாலும் சரி, உங்களுக்கு டீ எடுத்துக் கொடுக்கறவனாவது என்னை சேர்த்துக்குங்க சார்' என்று கால்களில் தடால் தடால் என்று விழுந்து எப்படியோ அவரைக் கரைத்து விட்டான்.