book

தமிழ் மண்ணே வணக்கம்

Tamil Mannae vanakkam

₹115+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :விகடன் பிரசுரம்
பதிப்பகம் :விகடன் பிரசுரம்
Publisher :Vikatan Prasuram
புத்தக வகை :இலக்கியம்
பக்கங்கள் :255
பதிப்பு :3
Published on :2009
ISBN :9788189780906
குறிச்சொற்கள் :காவியம், பொக்கிஷம், பழங்கதைகள், சிந்தனைக்கதைகள், சரித்திரம்
Out of Stock
Add to Alert List

சிந்தனையும் சிரிப்பும்தான் மனிதனை விலங்குகளிலிருந்து வித்தியாசப்படுத்திக் காட்டிய முக்கிய அம்சங்கள். பட்டங்களால் தன் பெயரை அலங்கரிப்பவனைவிட, நல்ல சிந்தனைகளால் மனதை அலங்கரிப்பவனே மேன்மையானவன். சிலருடைய சிந்தனைகளில் உலக வரலாறு எழுச்சிப் பெற்றிருக்கிறது. எனவேதான் 'துப்பாக்கி முனையைவிட பேனா முனை வலியது' என்கிறார்கள்.
கால ஓட்டத்தில் நிகழும் மாற்றங்களை உள்வாங்கிச் செரித்து, சுய முகத்தை இழக்காமல் எந்தவொரு சமூகம் தன்னைப் புத்துருவாக்கம் செய்துகொள்கிறதோ, அதுவே உலகை வழிநடத்தக்கூடிய நிலைக்கு உயர்கிறது. அப்படிப்பட்ட இறுமாந்த நிலைக்கு தமிழினத்தைத் தகுதிப்படுத்தும் தத்துவார்த்த முயற்சியே 'தமிழ் மண்ணே வணக்கம்!'

'யாதும் ஊரே யாவரும் கேளிர்' _என்ற உலகளாவிய சித்தாந்தத்தில் தோய்ந்தெழுந்த தமிழனின் மகோன்னத வரலாற்றையும், தமிழ் கலாசாரத்தின் நிகழ்கால கோளாறையும் அலசி ஆராய்ந்திருக்கிறார்கள், மேன்மைமிகு அறிஞர் பெருமக்கள்.

வெளிநாடுகளில் அரசு பீடமேறி ராஜ பரிபாலனம் செய்யும் தமிழன்தான், தன் சொந்த தேசத்தில் சாதி, மதம், ஆண்டான், அடிமை என்ற கீழ்த்தரக் கட்டுமானங்களில் கட்டுண்டுக் கிடக்கிறான். சன்மார்க்கத்தையும் ஜீவகாருண்யத்தையும் உயிர்மூச்செனப் போற்றித் தொழுத கைகளில் இப்போது ரத்தக் கறைகள்.

தமிழினத்தின் சமீபத்திய தலைமுறை, அந்நியக் கலாசாரத்தின் தலையாட்டிப் பொம்மையாக மாறிப்போனது எதனால்? யானை கட்டிப் போரடித்த தமிழனின் விளைநிலங்கள் 'ரியல் எஸ்டேட்டு'களாக மாறியதன் பின்னணியில் எது இருக்கிறது? உலகின் பசியாற்றிய உழவன், இப்போது பிச்சைப்பாத்திரம் ஏந்துவதற்கு என்ன காரணம்? இழந்துவிட்ட தமிழினத்தின் தொன்மங்களை மீட்டுருவாக்கம் செய்வது எப்படி? ‍_அறிவைத் தூண்டி சிந்திக்க வைக்கிறார்கள், தமிழறிஞர்கள்.

'தமிழினம் சிறுமைப்பட்டதற்கான முழுமுதல் காரணம், தன் சமூகம் குறித்த பின்னோக்கிய வரலாற்றுப் பார்வையும், தன்னை முன்னெடுத்துச் செல்லும் தீர்க்கச் சிந்தனையும் இல்லாமல் போனதுதான்' என்று ஆதங்கப்பட்டு, தமிழர்கள் அடைய வேண்டிய இலக்குகளை சுட்டிக் காட்டியிருக்கிறார்கள்.

கருத்துலக பெரியவர்களின் கனமான சிந்தனைகளைத் தொகுத்து 'ஆனந்த விகடன்' இதழில் ஆவணப்படுத்திய த.செ.ஞானவேலின் பேனா, மகுடம் சூடியிருக்கிறது. சிந்தனையில் ஆக்கபூர்வ மாற்றங்களை நிகழ்த்தப்போகும் இந்நூல், உங்கள் புத்தக அலமாரியில் இடம்பெறுமெனில் நீங்கள் பாக்கியசாலிகள்.