book

பெரிய பிரச்னை சின்ன தீர்வு

Periya Prachanai Chinna Theervu

₹120+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சாது ஶ்ரீராம்
பதிப்பகம் :மதி நிலையம்
Publisher :Mathi Nilayam
புத்தக வகை :வர்த்தகம்
பக்கங்கள் :168
பதிப்பு :2
Published on :2011
Add to Cart

அதிக பளு இல்லாத வேலை, பாஸிடம் நல்ல பெயர், இம்சிக்காத சக பணியாளர்கள், இனிக்கும் ப்ரமோஷன், நிறையச் கை சம்பளம் இவையெல்லாம், ஆபீஸுக்கு செல்பவர்களின் குறைந்தபட்ச எதிர் பார்ப்புகள். ஆனால், எல்லோருக்கும் இவை சாத்தியப் படுவதில்லை. ஏன்? யோசிக்கும்போது, எங்கோ, ஏதோ பிரச்னை இருப்பது புலனாகிறது. அந்தப் பிரச்னை எப்படிப்பட்டதாக இருந்தாலும், அவற்றுக்கு தீர்வு என்பது ஒன்று நிச்சயம் உண்டு. உங்கள் பாஸ் உள்பட, உடன் பணிபுரியும் அத்தனை பேரையும் வசீகரித்து விடுங்கள். சிதைந்த உறவுகளைச் சீர்செய்யுங்கள். எல்லோருக்கும் பிடித்த ஒரு நபராக மாறிவிடுங்கள். நிச்சயம் முடியக்கூடிய இவைதான், உங்களுடைய அனைத்துப் பிரச்னைகளையும் தீர்க்கக்கூடிய எளிய தீர்வுகள். அதாவது, வாழ்க்கையும் உறவுகளும் மிக எளிமையாகத்தான் இருக்கின்றன. அவற்றில் சிக்கலை ஏற்படுத்துவது, நமக்குத் தெரியாமல், நமக்குள் நுழைந்துவிடும் சில குட்டிச் சாத்தான்கள்தான். அவற்றை விரட்டியடிக்கும் வித்தையைக் கற்றுத்தருகிறார் சாது ஸ்ரீராம்.