book

டூரிங் டாக்கீஸ்

Touring talkies

₹105+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :இயக்குநர் சேரன்
பதிப்பகம் :விகடன் பிரசுரம்
Publisher :Vikatan Prasuram
புத்தக வகை :சினிமா
பக்கங்கள் :287
பதிப்பு :2
Published on :2006
ISBN :9788189780180
குறிச்சொற்கள் :திரைப்படம், இயக்குநர், சித்திரம், தகவல்கள், பொக்கிஷம், சேரன், அனுபவங்கள்
Out of Stock
Add to Alert List

சென்னையின் எக்மோர் ரயில் நிலையமும், பாரிமுனை பேருந்து நிலையமும் கனவுகளின் தலைவாசல். எங்கெங்கிருந்தோ வாழ்க்கையைத் தேடி தினம்தினம் வந்துகொண்டே இருக்கிறார்கள் பலர். அப்புறம் அவர்கள் எங்கே போகிறார்கள்? என்ன செய்கிறார்கள்? என்னவாகிறார்கள்? இதெல்லாம் வாழ்க்கை போடுகிற புதிர்கள்.
சுழன்றடிக்கிற யதார்த்தச் சூறாவளியில் அடித்துப்பிடித்து நீந்தி தங்களுக்கான கரையில் ஏறுபவர்கள் வெகு சிலரே! அப்படி எதிர் நீச்சல் போட்டு கரையேறிய ஓர் இயக்குநரின் வாழ்க்கையே இந்த 'டூரிங் டாக்கீஸ்!' கடலை மிட்டாய், முறுக்கு, பீடிப் புகை, மல்லிகைப்பூ வாசம், அரையிருள் காதல்கள்... டூரிங் டாக்கீஸ் என்ற வார்த்தை, நம் மனதில் எழுப்பும் பால்ய காலச் சித்திரங்கள் தனி வசீகரமுடையவை. இயக்குநர் சேரனின் டூரிங் டாக்கீஸ் வரைகிற சித்திரமும் அப்படி ஓர் அற்புதம். மண்ணை, மனிதர்களை, உறவுகளைப்பற்றியெல்லாம் நிலா ராத்திரியில் நெருங்கிய தோழனிடம் பேசுவது போல ஓர் உணர்ச்சிக் குவியல் சேரனின் இந்தத் தொடர்.

'பாரதி கண்ணம்மா'வில் தொடங்கி 'தவமாய் தவமிருந்து' வரை தன் ஒவ்வொரு படத்திலும் சமூகப் பொறுப்புள்ள கருத்துக்களைச் சொல்லிவரும் சேரன்... தற்போதைய தமிழ் சினிமாவில் மிக முக்கியமான ஓர் இயக்குநர். வியாபார வேட்டைக்கு நடுவிலும் நல்ல படைப்புக்கான சத்தியத்தோடு இயங்கும் வெகு சிலரில் சேரனும் ஒருவர். அவரது அனுபவங்கள் ஆனந்த விகடனில் தொடராக வந்தபோது கிடைத்த வரவேற்பும் பாராட்டும் அபாரம். இப்போது புத்தகமாகவும் உங்கள் கரங்களில் 'டூரிங் டாக்கீஸ்!' இது நம் எல்லோருக்குமான நம்பிக்கை விதை!