
நான் துணிந்தவள்
Himmat Hai
₹195+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கிரண் பேடி
பதிப்பகம் :கிழக்கு பதிப்பகம்
Publisher :Kizhakku Pathippagam
புத்தக வகை :பொது
பக்கங்கள் :322
பதிப்பு :1
Published on :2011
ISBN :9788128829765
Out of StockAdd to Alert List
இந்திய காவல்துறையில் இணைந்த முதல் பெண் என்று கருதப்படும் கிரண்பேடி தொடர்பான செய்தியொன்று அண்மையில் படிக்கக்கிடைத்தது. இவரது பெயர் அடிக்கடி ஊடகங்களில் அடிபடுவதனால் அவர் தமது சுயவிளம்பரத்திற்காக அதிரடி செயல்களில் ஈடுபடுபவர் என்று அவரது எதிரிகள் விமர்சிப்பார்கள்.
ஆனால் – அவர் சுயபுகழ் விரும்பி அல்ல. ஊழலுக்கும் மோசடிகளுக்கும் எதிரானவர். மனிதநேயத்துக்கும் மனித உரிமைக்கும் குரல் கொடுப்பவர். எத்தகைய சவால்களையும் மரண அச்சுறுத்தலாக இருந்தாலும் கூட எதிர்கொள்ளுவார்.
சில வருடங்களுக்கு முன்னர் அண்ணா ஹசாரே நடத்திய ஊழலுக்கு எதிரான மாபெரும் சத்தியாக்கிரக போராட்டத்திலும் கலந்துகொண்டு குரல் எழுப்பி தமது ஆதரவை வெளிப்படுத்தி யவர்.
====
திகார் படத்தின் இசைத்தட்டு வெளியீட்டு விழாவில் திகார் சிறைக்கு நோபல் பரிசு பரிந்துரைக்கவேண்டும் என்று பேசியிருக்கிறார் கிரண் பேடி.
திகார் சிறை போல இந்தியாவில் உள்ள சிறைச்சாலைகள் மாறினால், இந்திய சிறைத் துறைக்கு அமைத்திக்கான நோபல் பரிசு கிடைக்கும் என்பதில் சந்தேகமில்லை
‘திகார்‘ என்ற வார்த்தையை படத்திற்கு தலைப்பாக வைத்த பின் எப்படி இந்த நிகழ்ச்சிக்கு வர மறுக்க முடியும். இங்கே திகாரில் நடந்த ஒரு சின்ன விஷயத்தை பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.
9 மாதங்கள் எந்தவிதமான பதவியும் இல்லாமல் இருந்தேன். அந்த காலகட்டம் முழுக்க சம்பளம் மட்டும் வாங்கிக்கொண்டிருந்தேன். ஏன் வேலை கொடுக்கவில்லை …? என்று உரிய அலுவலரிடம் கேட்டபோது – வேறு வழியில்லாமல் எனக்கு ‘திகார்’ சிறைச்சாலை பணியில் அமர்த்தினார்கள். அதுவும் அந்த சிறைக்கு யாரும் போக மறுத்ததால் நான் பொறுப்பு ஏற்றுக்கொண்டு போக நேர்ந்தது.
எனது நண்பர்கள் பலரும் ” அங்கு போக வேண்டாம். அந்த பணியை வீட்டிலிருந்தே செய்யலாம்” – என்று ஆலோசனை கூறினர். திகார் பற்றி குறையாக பலரும் பார்த்த நேரத்தில் நான் அங்கு மனிதத்தை மட்டுமே பார்த்தேன். அங்கிருந்த நிலையை பார்த்து – அந்த இடத்தை ஒரு மருத்துவமனையாகவே பார்த்தேன்.
திகார் பற்றி It’s Always Possible என்ற புத்தகத்தை நான் எழுதியுள்ளேன். திரைத்துறையினர் அதை படமாக்க கேட்டுள்ளனர். அப்புத்தகத்தில் உள்ளதை அப்படியே படமாக எடுத்தால் கண்டிப்பாக ஆஸ்கர் விருது கிடைக்கும். இத்தாலி பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல நாடுகளில் அது பாட புத்தகமாக உள்ளது.
இந்த நூல் இன்னும் தமிழில் மொழிபெயர்க்கவில்லை என்பது கொஞ்சம் வருத்தம்தான். அதை படமாக எடுத்து அதில் கிடைக்கும் பணத்தை சிறைச்சாலை சார்ந்த ஆசிரமக் குழந்தைகளின் எதிர்காலத்திற்கு பயன்படுத்த வேண்டும் என்பதே என் ஆசை. அங்குள்ள 10, 000 கைதிகளில், 3000 க்கும் மேற்பட்டவர்கள் படிக்காதவர்கள். அங்கே ஆசிரியர்கள் கிடையாது. கல்வி இல்லாத இடத்தில் எந்தவித மாற்றமும் நிகழாது. அங்கு பணியாற்றிய நாட்களில் படித்த கைதிகளையே ஆசிரியர்களாக மாற்றினோம்.
தமிழ் மட்டுமே தெரிந்த பல கைதிகள் அங்கு படித்து ஆங்கிலம், இந்தி ஆகிய மொழிகள் கற்றனர். கைதிகளே ஆசிரியர்களாக மாறிய நிலை திகார் சிறைச்சாலையில் நடந்தது. காலை 9 மணி முதல் 11 மணி வரைக்கும் பாடம் கற்கும் நேரமாக உருவாக்கினோம்.
இந்த முயற்சி இந்தியா முழுவதும் உள்ள ஒவ்வொரு சிறைச்சாலைக்கும் சாத்தியமானது. இதை சாத்தியப்படுத்தினால் இந்தியாவை முதல் தர நாடு என்ற பட்டியலில் கொண்டு வர முடியும். அங்கு வேலை பார்த்த நாட்களில் மட்டுமில்லாமல் இப்போதும் அங்கே கல்வி சேவையோடு என்னை இணைத்துக்கொண்டே வருகிறேன். அதற்காகவே – நான் தொடங்கிய India Vision Foundation நிறுவனம் மூலம் பலருக்கும் உதவி செய்து வருகிறோம். இதன் துணையோடு செயல்பட்டு வரும் பள்ளி இங்கு இன்றும் நடந்து வருகிறது.
கடந்த 20 ஆண்டு கால உழைப்பில் அங்கு கைதிகளாக இருந்து படிக்கத் தொடங்கிய பலரும் இப்போது பட்டப்படிப்பு வரைக்கும் முடித்திருக்கிறார்கள். இது கடந்த 20 ஆண்டு கால உழைப்பு. திகார் சிறை போல, இந்தியாவில் உள்ள சிறைச்சாலைகள் மாற வேண்டும். அவ்வாறு மாறினால் இந்திய சிறைத் துறைக்கு நோபல் பரிசு கிடைக்கும் என்பதில் சந்தேகமில்லை.
‘திகார்‘ என்றால் வன்முறை என்பது திரையில் மட்டும்தான். ஆனால், அங்கு வன்முறை இல்லை. இது போன்ற படத்தை எடுப்பது கடினமான விஷயம். இந்த கடின உழைப்பை பாராட்டுகிறேன். பாலிவுட்டிற்கு பிறகு கோலிவுட் பெரிய இடத்தை பிடித்திருக்கிறது. படக்குழுவினருக்கு வாழ்த்துகள். ” – என்று கிரண் பேடி பேசினார்.
கிரண் பேடி பேசி முடித்தவுடன் – நடிகர் பார்த்திபன் உடனடியாக
It’s Always Possible புத்தகத்தின் தமிழாக்கம் பொறுப்பை தான் ஏற்றுக் கொள்வதாக அறிவித்தார்.
