book

கொண்டாடும் உறவுகள்

Kondadum Uravugal

₹80+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :லதா முகுந்தன்
பதிப்பகம் :செங்கைப் பதிப்பகம்
Publisher :Sengai Pathippagam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :240
பதிப்பு :1
Published on :2009
Add to Cart

கொண்டாடும் உறவுகள் - லதா முகுந்தன் அவர்கள் எழுதியுள்ள இந்த நாவல் செங்கை பதிப்பகத்தின் 46வது வெளியீடாகும். திருமதி லதா முகுந்தன் அவர்கள் குடும்ப நாவல்கள் எழுதுவதில் தனித்துவம் படைத்தவர். இதுவரை 20க்கும் மேற்பட்ட நாவல்கள் எழுதி வாசகர்கள் மத்தியில் செல்வாக்குப் பெற்றுள்ளார். ‘லதா முகுந்தன் நாவல்களில் பெண்ணீயம்’ என்பதைப் பற்றி பி.எச்.டிக்காக திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழகத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. 2009க்குள் அந்த ஆய்வு முடிந்துவிடும். ஏற்கனவே தனித்தனியாய் இவரது நாவல்களில் எம்.பில். ஆய்வு மேற்கொண்டு இருவர் பட்டம் பெற்றுவிட்டனர். இத்துணை சிறப்புடைய திருமதி லதா முகுந்தன் அவர்கள், மீண்டும் ஒரு குடும்பத்தைக் கதைக் களமாய் எடுத்துக் கொண்டு, இப்பொழுது உறவுகளுடன் அவர் - களின் நெளிவு, சுளிவுகளுடன் - கொண்டாடியுள்ளார். வாசியுங்கள். கருத்துக்களை தயவு செய்து எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். மேலும் மேலும் நல்ல நூல்களைத் தர நாங்கள் நிச்சயம் முயற்சி செய்வோம்.