book

பிரியமுடன்

Piriyamudan

₹150+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :அமுதவல்லி கல்யாணசுந்தரம்
பதிப்பகம் :அருணோதயம்
Publisher :Arunothayam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :392
பதிப்பு :1
Published on :2010
Add to Cart

சொல்லச் சொல்ல இனிக்குதடா 1 முருகா' என்ற சுசீலாவின் பாடலை மெல்லிய குரலில் முணுமுணுத்தபடி, இரவு சமையல் வேலையை கவனித்துக் கொண்டு இருந்த மஞ்சரியின் காதுகளில், ஹாலில் தன் குழந்தைகளோடு குழந்தையாய் கும்மாளம் அடிக்கும் அனுவின் குரல் கேட்டு புன்னகை மலர்ந்தது. இந்த வீட்டிற்கு தான் வரும்போது, மலரத் துடிக்கும் மொட்டாய் இருந்த அனு, இன்று மலர்ந்து மணம் வீசி ஜொலித்துக் கொண்டு இருக்கிறாள். கண்ணைக் கவரும் அழகு. விரைவில் நல்லவன் ஒருவன் கையில் ஒப்படைக்க வேண்டும். இவள் வளர்ந்து விட்டாள் என்பதே அவளின் அண்ணனுக்குப் புரிய மாட்டேன் என்கிறது. அவளுக்குக் கல்யாணம் செய்வது பற்றி பேச்சு எடுத்தாலே அடக்க முடியாமல் வாய்விட்டுச் சிரிக்கும் ஷ்யாம்சுந்தருக்கு அவள் இன்னும் குழந்தை தான்.