book

சித்திர பாரதி

Sithira Bharathi

₹660.25₹695 (5% off)
எழுத்தாளர் :ரா. அ. பத்மநாபன்
பதிப்பகம் :காலச்சுவடு பதிப்பகம்
Publisher :Kalachuvadu Pathippagam
புத்தக வகை :வாழ்க்கை வரலாறு
பக்கங்கள் :234
பதிப்பு :3
Published on :2010
ISBN :9788189359614
குறிச்சொற்கள் :பாரதியார், வாழ்கைவரலாறு
Add to Cart

சித்திர பாரதி எனும் இந்நூலில் 220 அரிய புகைப்படங்குடன் கூடிய ஆதாரபூர்வமான பாரதி வாழ்க்கை வரலாறு இடம்பெற்றுள்ளது.

மூன்று வருட இடையறாத முயற்சிக்குப் பின், இன்று ஒருவாறு திரும்தியடைந்து இந்நூல் வெளியிடப்பட்டிருப்பதாக பதிக்கத்தார் கூறியிருக்கின்றனர்.

பாரதி பொருட்காட்சியில் இருந்ததைப் போல இரண்டு மடங்கு படங்களும் அதற்குப் பன்மடங்கு அதிகமான அரிய தகவல்களும் இப்போது சேர்ந்து இந்நூல் தயாரிப்பதில் உபயோகிப்பட்டுள்ளன.  இன்னும்கூடப் பல அபூர்வமான பாரதிச் சுவடுகள்' எதிர்பாராதபடியெல்லாம் கிடைத்துக்கொண்டேயிருக்கின்றன என்பதும் குறிப்பிடத்தக்க விஷயமாகும்.

கிடைத்தற்கரிய அசல் பாரதி கடிதங்களும் கையெழுத்துப் பிரதிகளும் பழம் பத்திரிகைகளும், அச்சில் இல்லாத பல பாரதி நூல்களும், பாரதியன்பர்களின் புகைப்படங்களும் இன்னும் பல விஷயங்களும் பாரதி பொருட்காட்சியில் வைக்கப்பட்டிருந்தன.  இந்த அரிய பொருள்களை அடிக்கடி பொருட்காட்சியாய் வைப்பதில் சில சிரமங்கள் இருக்கின்றன. தொட்டால் பொடித்து விழும் பழம் தாள்களை இவ்வாறு அடிக்கடி எடுத்துவைப்பதால் மேலும் சேதமடைகின்றன. இதற்கு என்ன செய்வோமென்று நினைத்திருந்த சமயம், 'அமுத நிலையம்' நிர்வாகி ரா.ஸ்ரீ.ஸ்ரீ கண்டன், பொருட்காட்சியிலுள்ள விஷயங்களையும் படங்களையும் சேர்த்து ஒரு நூலாக வெளியிடலாம் என்ற எண்ணத்தின் அடிப்படையில் விளைந்ததே இந்நூல்.