இன்று நம்மிடையே நிலவி வரும் பெரிய பிரச்னை ஜாதிப் பிரச்னைதான். ஆரியன்,திராவிடன் எனத் தொடங்கி, இன்று பல்வேறு கிளைகளாகப் பிரிந்து ஊருக்கு ஒரு ஜாதி எனத் தொடங்கி, நாட்டையே உலுக்கிக் கொண்டிருக்கும் இந்தப் பிரச்னையில் அரசியல்வாதிகள் தலையிட்டு, அதுவும் தங்களது சுய அரசியல் நோக்கத்திற்காக மட்டும்,மேலும் குழப்பி கலகத்தை விளைவித்து மக்களை ஜாதி என்ற காரணம் காட்டிப் பிரித்து வைத்து, கேலிக் கூத்தாடுகிறார்கள். இது இப்படியிருக்க -கலப்புத் திருமணம் என்ற வேஷம் வேறு ! இதற்கு அரசாங்கம் ஆதரவு அளிக்கிறதாம்! ஆனால் இவையெல்லாம் தனக்கென்று வந்தால்தான் ஒவ்வொருவருக்கும் தெரியும். இதையேதான் திரு. சொ அவர்கள் இந்தப் புத்தகத்தில் வெகு அழகாக விளக்கி இருக்கிறார்.