book

இணையற்ற இந்தியத் தலைவர்கள் டாக்டர். அம்பேத்கர்

Leaders Par Excellence-Dr.B.R.Ambedkar

₹20+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :அ.சா. குருசாமி
பதிப்பகம் :சுரா பதிப்பகம்
Publisher :Sura Pathippagam
புத்தக வகை :வாழ்க்கை வரலாறு
பக்கங்கள் :40
பதிப்பு :1
Published on :2010
ISBN :9788174789495
குறிச்சொற்கள் :தகவல்கள், பொக்கிஷம், சரித்திரம், நுணுபவங்கள, தலைவர்கள்
Out of Stock
Add to Alert List

பல சான்றோர்கள் அளித்த வரலாற்றுச் சிறப்புமிக்க மாநிலம் மராட்டியம். ஆனால் மனதில் சாதி என்ற அழுக்குப் படிந்த மாநிலமாக இருந்தது. தீண்டாமைக் கொடுமை உச்சகட்டமாக அங்கு இருந்த கால கட்டம். உயர் சாதி என்று தங்களைக் கூறிக்கொண்டவர்களால் தீண்டத் தகாதவர்கள் என்று ஒதுக்கிவைக்கப்பட்டவர்கள் மகார் உன மக்கள். இந்தியாவில் பிறந்தாலும் உரிமை கொண்டாட உரிமை இல்லாத மக்களாக வாழ்ந்து வந்தனர். அவர்கள் உயர் சாதியினர் வாழும் தெருக்களில் நடமாடக் கூடாது. காலணிகள் அணியக் கூடாது. மேல் சட்டை போட்டு வரக் கூடாது. ஆடு மாடுகளுக்கு உள்ள உரிமை கூட அவர்களுக்கு இல்லை. மகார் மக்களிடம் உழைக்கும் வலிமை உண்டு; வீரம் உண்டு; நாட்டு விடுதலையில் நாட்டம் உண்டு. அவர்களுடைய ஆற்றலைப் புரிந்து கொண்ட ஆங்கிலேய அரசு மகார் இன மக்களை இராணுவத்தில் சேர்த்துக் கொண்டது.