book

நட்சத்திரப் பலன்கள்

Natchathiraa Palangal

₹120+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கே.பி. வித்யாதரன்
பதிப்பகம் :விகடன் பிரசுரம்
Publisher :Vikatan Prasuram
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :272
பதிப்பு :3
Published on :2009
ISBN :9788184761849
குறிச்சொற்கள் :தெய்வம், கடவுள், கோயில்கள், வழிப்பாடு, பொக்கிஷம், நட்சத்திரம்
Out of Stock
Add to Alert List

நட்சத்திரப் பலனையோ ராசி பலனையோ தெரிந்துகொள்ள எல்லோருக்குமே ஆர்வம் உண்டு. அவை பலித்தால் மனம் மகிழும். இல்லை எனில் அடுத்த தவணைக்காகக் காத்திருக்கவும் தயார். அவ்வளவு ஏன்? ஆபீசுக்குப் போகும்போது அடுத்த சீட்காரர் கையில் ஏதாவது பத்திரிகையை விரித்து வைத்து நட்சத்திரப் பலனை படித்துக் கொண்டிருந்தால், தம் நட்சத்திரத்துக்கு என்னதான் பலனும் பரிகாரமும் போட்டிருக்கிறது என்று எட்டிப் பார்க்காதவர்கள் குறைவாகத்தான் இருப்பார்கள். இருபத்து ஏழு நட்சத்திரங்களில், ஏதாவது ஒன்றில்தான் அனைவரும் பிறந்தாக வேண்டும். ஆனால் அவற்றைக் கோள்கள் ஆதிக்கம் செலுத்தும்போது குணநலன்களும் பலன்களும் வேறுபடுகின்றன. ஒவ்வொரு நட்சத்திரத்துக்கும் பொதுவான பலன்களையும் நட்சத்திரத்தின் நான்கு பாதங்களுக்கும் தனித்தனியான பலன்களையும் இந்த நூலில் கொடுத்திருக்கிறார் நூலாசிரியர் கே.பி.வித்யாதரன். புராதன நூல்களில் காணப்படும் நட்சத்திரப் பலன்களை அறிந்து அவற்றை விரிவாக எழுதி இருக்கிறார். எந்தெந்த வேலையில், எந்தெந்தக் கலைகளில் நட்சத்திரக்காரர்கள் பரிமளிப்பார்கள் என்ற சுவையான பலன்கள் தெளிவாக டிகிரி சுத்தமாக ஆராய்ந்து வைக்கப்பட்டிருக்கின்றன. பொது வாழ்க்கையில் ஆர்வம் கொண்டு குடும்பத்தை அசட்டை செய்வாரா அல்லது குடும்பத்தினர் சொந்தக்காரர்கள் மீது மட்டும் ஆர்வம் இருக்குமா; அல்லது பொது வாழ்க்கை, குடும்பம் இரண்டிலும் கெட்டிக்காரராக இருப்பாரா போன்ற பல நுணுக்கமான தகவல்கள் இந்நூலில் விரவிக் கிடக்கின்றன. ஜோதிட ரீதியான பலன்கள் மட்டுமல்லாது, வானியல் ரீதியாக ஒவ்வொரு நட்சத்திரத்துக்குமான அறிவியல் தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளது சிறப்பு. நட்சத்திரங்களின் ‘பயோ‍_டேட்டா’, மற்றும் நட்சத்திர தேவதைகளின் மந்திரம் _ துதி ஆகியனவும் தரப்பட்டிருக்கின்றன. அதைப் போலவே இருபத்தியேழு நட்சத்திரக்காரர்களின் குணநலன்களும் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. இவற்றை அனுசரித்து எதிராளிகள் நடந்துகொள்ளும் சாத்தியம் இருக்கிறது! பொதுவான பலன்களைத் தவிர 2009_ம் வருடத்துக்கான குறிப்பிட்ட பலன்களும் இருபத்தியேழு நட்சத்திரங்களுக்கும் தனியாக இறுதியில் கொடுக்கப்பட்டிருக்கின்றன. இவை அனைத்தும் வாசகர்களுக்குச் பயனுள்ளதாக இருக்கும்.