book

நாட்டுப் பசுக்கள் நாட்டின் செல்வம் (ஒரு மரபியல் ஆய்வு)

Naatu Pasukal Naatin Selvam

₹55+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஆர்.எஸ். நாராயணன்
பதிப்பகம் :தாமரை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட்
Publisher :Tamarai publications (p) ltd
புத்தக வகை :விவசாயம்
பக்கங்கள் :100
பதிப்பு :1
Published on :2009
குறிச்சொற்கள் :டிப்ஸ், உழவுத்தொழில், கால்நடைவளர்ப்பு
Out of Stock
Add to Alert List

பசுமைப்புரட்சியின் தீய விளைவுகளை விவசாயிகளும் பொதுமக்களும் இன்றைய தினம் நன்கு உணர்ந்து கொண்டுள்ளனர். அமோக விளைச்சல் என்ற கூச்சல் ஒய்ந்துவிட்டது. விவசாயிகளின் தற்கொலை சாவுகளும் விவசாய வாழ்க்கையின் கடுமையையும் தாங்கமுடியாத துயரத்தையும் எடுத்துக் காட்டுகின்றன. ரசாயனம் விவசாயம் செய்து பழக்கப்பட்ட விவசாயிகளின் வீடுகளில் இன்றைக்கு மாடுகளைக் காணோம்? மாடுகள் இருந்த இடத்தில் டிராக்டர் வந்துவிட்டது. பசு மாடுகள் பால் கறந்தன. எருதுகள் வண்டியிழுத்தன. வயலை உழுதன, பல்வேறு விவசாய வேலைகளுக்குப் பயன்பட்டன. மாடுகளின் பலவகையான பயன்பாட்டை மறந்துவிட்டதால் மாடு என்றதும் பாலும் பால்மடியும்தான் என நினைத்துக்கொண்டதால் , உள்நாட்டு மாட்டினங்களை வளர்ப்பதைக் கைவிட்டு, வெளிநாட்டு இனங்களை அதிகம் பால் கறக்கும் என்ற காரணத்தில் வளர்க்க ஆரம்பித்தார்கள். இந்த நூலில் நாட்டின் செல்வங்களாகிய நாட்டினைப் பசுக்களின் பல்வேறு மரபியல் பண்புகளைப் பட்டியலிட்டு வழங்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டு விவசாயிகள் காங்கிரஜ், சாகிவால், தார்பார்கர் ஓங்கோல் போன்ற நாட்டினப் பசுக்களை வளர்த்து மகிழவேண்டும். நாட்டினப் பசுக்களைப் பற்றி ஆய்வு செய்யும் கால்நடை மருத்துவப் பட்டதாரிகளுக்கும் இந்த நூல் பயன்படும். - பதிப்பகத்தார்.