book

சமைக்கலாம் வாங்க

Samaiklaam Vaanga

₹60+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :செல்லம்
பதிப்பகம் :கற்பகம் புத்தகாலயம்
Publisher :Karpagam Puthakalayam
புத்தக வகை :சமையல்
பக்கங்கள் :80
பதிப்பு :4
Published on :2009
குறிச்சொற்கள் :ஆரோக்கியம், சத்துகள், சமையல் குறிப்புகள், ருசி, சுவை, முயற்சி, உழைப்பு
Add to Cart

காலம் முழுவதும், சமையல் வகுப்புகள் நடத்துவதிலேயே என் கவனத்தைச் செலுத்தியதால், புத்தகம் எழுதும் எண்ணமே எனக்கு
எழுந்ததில்லை. ஆனால்,35 வருட செய்முறை அனுபவமும்,50,000 பேருக்கு  மேல் சொல்லிக்கொடுத்த அனுபவமும், அவசியம் பகிர்ந்ந்து கொள்ளப்ட வேண்டிய  ஒன்று என்று என் இனிய சிநேகிதி லோகநாயகி கிரஷ்ணகுமாரி , அனுராதா ஆகியோர் வற்புறுத்தியதும் புத்தகம் எழுதும் எண்ணம் எனக்குள் எழுந்தது. இவையெல்லாவற்றிற்கும் மேலாக, என்னை முதன் முதலாக மெனுராணி என்ற  முத்திரையை  அளித்து பத்திரிகை உலகத்திற்கு   அறிமுகம் செய்து வைத்த  பிரபல பாரம்பரியமான ஆனந்த விகடன் சீனிவாசனுக்கும் ராதிகா சீனிவாசன் அவர்களுக்கும்  காலம் முழுவதும் நான் கடமைப்பட்டிருக்கிறேன். ஆனந்த விகடன் பத்திரிகையில் (திரு. ரமேஷ்வைத்யா உதவியுடன் சுமார் ஆறு மாதங்களுக்கு மேல் விடாமல்) எழுதியது ஒரு மறக்க  முடியாத  அனுபவம். 35 வருட அனுபவம் என்பது ஒரு சுரங்கம் போல அதைத் தோண்டத் தோண்ட நமக்கு நிச்சயம் நிறையபுதையல்கள் கிடைப்பது உறுதி. கூட்டுக்குடும்பங்கள் குறைந்துவிட்ட இந்த நாட்களில் பாரம்பரியமான உணவு முறையைச் சொல்லிக்  கொடுக்க வீட்டில்  பெரியவர்கள் இல்லை.  காலப்போக்கில் நேரமின்மை பாரணமாக  நமக்கு  சில நிமிட சமையலும்  தேவையாகிறது. இவை இரண்டையும் மனதில் கொண்டு ரெசிபிகளை தந்திருக்கிறேன். படித்துப் பயன் பெறுவீர்கள்  என்று நம்புகிறேன்.

                                                                                                                                            -மெனுராணி செல்வம்.