book

சிலிக்கன் சில்லு

Silicone Sillu

₹100+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ராமநாதன்
பதிப்பகம் :கிழக்கு பதிப்பகம்
Publisher :Kizhakku Pathippagam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :127
பதிப்பு :1
Published on :2010
ISBN :9788184934830
Out of Stock
Add to Alert List

இருபத்தோராம் நூற்றாண்டை அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் புரட்சியின் நூற்றாண்டாக அழைப்பது பொருத்தமாக இருக்கும். குறிப்பாக, டிஜிட்டல் புரட்சி நம் அன்றாட வாழ்க்கையை அடியோடு மாற்றியமைத்துவிட்டது என்பது உங்களுக்குத் தெரியுமா?

ஒரு சிறிய சில்லுக்குள் ஏகப்பட்ட டிரான்சிஸ்டர்கள் பொருத்தமுடியும் என்று அறிவியல் உலகம் கண்டுபிடித்த அந்த மந்திர நொடியில் ஆரம்பமான புரட்சி இது. சர்வ சாதாரணமாக இன்று நாம் பயன்படுத்தும் சாதனங்கள் அனைத்துக்கும் அடிப்படை சிலிக்கன் சில்லு. எலெக்ட்ரானிக்ஸ் சாதனங்களின் விலை ஆச்சரியத்தக்க வகையில் குறைந்திருப்பதற்கும் அவற்றின் திறன் முன்பைவிட அதிகரித்திருப்பதற்கும் காரணம், சிலிக்கன் சில்லு.

சிலிக்கன் சில்லு என்றால் என்ன? இது எப்படி வேலை செய்கிறது? இதைத் தயாரிக்கப் பயன்படும் முறைகள் என்னென்ன ஆகிய பல விவரங்கள், இந்தப் புத்தகத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. மாணவர்களுக்கும் அறிவியல் ஆர்வலர்களுக்கும் பயன்படும் நோக்கில் சுலபமான மொழி நடையில் ஏராளமான வரைபடங்களுடன் இந்நூல் உருவாக்கப்பட்டுள்ளது.

நூலாசிரியர் ராமநாதன், சிலிக்கன் சில்லு தயாரிக்கும் தொழில்நுட்பத்தில் ஆய்வு செய்து அமெரிக்காவில் பிஎச்.டி பட்டம் பெற்றவர். சிலிக்கன் சில்லு தயாரிக்கும் துறையில் அமெரிக்க நிறுவனம் ஒன்றில் பணியாற்றியவர். கடந்த ஏழு ஆண்டுகளாக சென்னை ஐ.ஐ.டி.யில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார்.