book

வருமான வரி

Varumana Vari

₹55+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :என்.எஸ். ஸ்ரீனிவாசன்
பதிப்பகம் :விகடன் பிரசுரம்
Publisher :Vikatan Prasuram
புத்தக வகை :வர்த்தகம்
பக்கங்கள் :103
பதிப்பு :3
Published on :2009
ISBN :9788184761160
குறிச்சொற்கள் :தொழில், பங்குச்சந்தை, வியாபாரம், வரித்துற, தொகுப்பு, பணம்
Out of Stock
Add to Alert List

ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி மாதத்தில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்போது வருமான வரி தொடர்பான சலுகைகள் பற்றித்தான் மாதச் சம்பளக்காரர்கள் ஆர்வத்துடன் கவனிப்பார்கள். பட்ஜெட்டில் வருமான வரிக்கான உச்சவரம்பு உயர்த்தப்படும் போதெல்லாம் இவர்கள் முகங்களில் பிரகாசம் கூடும்! அதே மாதிரி மார்ச் மாதத்திலிருந்து செப்டம்பர் வரையில் வருமான வரி தாக்கல் பரபரப்பாக நிகழும். கடைசி நாளன்று வருமான வரித்துறை அலுவலகத்தில் கூட்டம் அலைமோதும்! அந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த வருமான வரி பற்றிய நூல் இது. நூலாசிரியர் என்.எஸ்.ஸ்ரீனிவாசன் சென்னையில் பிரபலமான ஆடிட்டர். வரி, வரிவிலக்கு, வரிச்சலுகை மற்றும் வரி தொடர்பான விஷயங்களை விரல் நுனியில் வைத்திருப்பவர்.வருமான வரி தொடர்பான, நடைமுறைக்கு இணங்கிச் செல்லக் கூடிய ஆலோசனைகளை நமக்குப் புரியும் விதத்தில் எளிமையாக இந்த நூலில் விவரிக்கிறார் இவர். ‘தனிநபரோ அல்லது அவரைச் சார்ந்தவர்களோ அல்லது ஒரு ஹெச்.யூ.எஃப். குடும்ப உறுப்பினரோ செயல்பட முடியாத அளவுக்கு உடலில் ஊனமுற்று அதற்கான சிகிச்சைக்காகச் செலவு செய்தால், அதற்கும் வரிச் சலுகை பெறலாம். இந்த வகையில் ஓராண்டில் 50,000 ரூபாய் வரை வரிவிலக்குக் கிடைக்கும். மிகவும் தீவிரமான ஊனத்தால் பாதிக்கப்பட்டிருந்தால், 75,000 ரூபாய் வரை வரிச் சலுகை பெறலாம். வரி கட்டுபவரைச் சார்ந்திருக்கும் அவரின் மனைவி/கணவன், குழந்தைகள், பெற்றோர், சகோதர _ சகோதரிகள் போன்றவர்களுக்கான மருத்துவச் சிசிச்சைக்கும் இந்தச் சலுகை உண்டு. 80% அல்லது அதற்கு மேல் செயல்பட இயலாமல் இருப்பவரைத்தான் செயல்பட இயலாதவர் என்று சட்டம் சொல்கிறது.’ _ இப்படி நிறையத் தகவல்கள் இந்த நூலில் விரவிக் கிடக்கின்றன. வருமான வரி தொடர்பான விஷயங்களை, வாசகர்கள் ஆர்வத்துடன் வாசிக்கும்படியான எளிய நடையில் ‘நாணயம் விகடன்’ இதழ்களில் நூலாசிரியர் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பே இந்த நூல். வருமான வரி செலுத்துபவர்களுக்கு இது ஒரு பயனுள்ள கையேடு!