book

வேலைக்காரிகளின் புத்தகம்

Velaikkaarigalin Puthagam

₹65+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :Shoba sakthi
பதிப்பகம் :கருப்புப் பிரதிகள்
Publisher :Karuppu Pradhigal
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :144
பதிப்பு :1
Published on :2007
Out of Stock
Add to Alert List

புத்தகக் குறிப்பு : ஈழம் – புலம்பெயர் சூழல் – தமிழகம் என முப்பரிமாணங்களடங்கிய வாசக மனங்களை மிகக் குறுகிய கால இடைவெளியில் வசப்படுத்திக் கொண்டவர் ஷோபாசக்தி. எல்லையிட்டுக் கொள்ளாத, தீர்வுகளைச் சொல்ல முடியாத வாழ்வைக் கலாச்சாரப் பிரதிகளாக முன்வைத்து வருபவை அவரது எழுத்துகள். ஈழம் பற்றிய நமக்கிருக்கும் புனைவுகளையும் அதன் சாதி சார்ந்த இருப்பையும் இயங்குபாட்டையும் தன் நுண்ணரசியல் அணுகுமுறையோடும் இலக்கியத் தன்மையோடும் இப்பிரதிகளில் விமர்சிக்கின்றார் ஷோபாசக்தி. ஆசிரியர் குறிப்பு: ஷோபாசக்தி 1967 ஆம் ஆண்டு வட இலங்கையில் அல்லைப்பிட்டி என்ற தீவகக் கிராமத்தில் பிறந்தவர். அரசியல் அகதியாக 1990 இல் தாய்லாந்துக்கும் 1993 இல் பிரான்சுக்கும் புலம் பெயர்ந்தவர். சிறுகதை, நாவல், திறனாய்வு, பதிப்பு என இலக்கியத்தில் இயங்கி வரும் இவருடைய நாவல்களும் சிறுகதைகளும் மொழிபெயர்க்கப்பட்டு மலையாளம், பிரெஞ்சு, ஆங்கிலம், சிங்களம், ஜெர்மன் ஆகிய மொழிகளில் வெளியாகியுள்ளன. நடிகராகவும் கதாசிரியராகவும் தமிழ், பிரெஞ்சு, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் திரைப்படம் மற்றும் நாடகங்களில் செயற்படுகிறார். கலை மற்றும் சினிமாவுக்கான பிரெஞ்சு அகாதமியின் உறுப்பினர்.