book

வியாசர் அருளிய மகாபாரதம்

Viyasar Aruliya Mahabharatham

₹350+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :அழகர் நம்பி
பதிப்பகம் :கவிதா பப்ளிகேஷன்
Publisher :Kavitha Publication
புத்தக வகை :இலக்கியம்
பக்கங்கள் :464
பதிப்பு :4
Published on :2014
ISBN :9788183454216
Out of Stock
Add to Alert List

இயல்பான வாழ்க்கையையும் தர்மத்தையும் பேசுகின்ற இந்த இதிகாசங்கள் - விஞ்ஞானம் வளர்ந்துவிட்ட - நவீன யுகத்திலும் - பழக்க வழக்கங்களிலும் தனக்கெனத் தனி இடத்தைப் பெற்றுள்ளதே அதன் சிறப்பு. மனித வாழ்க்கையில் எத்தனை மாற்றங்கள் ஏற்பட்டாலும் அடிப்படை மனித உணர்வுகளான - அன்பு - பாசம், பக்தி - ஈகை. பொறாமை - பொய்மை - சூது - தந்திரம், காமம் - கோபம், துரோகம் - வீரம், சத்தியம் போன்றவை மாறுவதில்லை - தேவைக்கேற்ப - அவரவர் மனோதர்மத்திற்கேற்ப அளவில் வேண்டுமானால் மாறுபாடு உள்ளவையாக இருக்கலாம்.
மேற்குறிப்பிட்ட உணர்வு நிலைகளையும் அதனால் ஏற்படும் சோதனைகளையும் தாங்கி நிற்கின்ற கதாபாத்திரங்களே மகாபாரதத்தின் கதாபாத்திரங்கள். அத்தகைய கதாபாத்திரங்களே இன்றைய நமது வாழ்க்கையிலும் அன்றாடம் நாம் சந்திக்கும் மனிதர்களாக உலாவுகின்றனர்.வாழ்க்கையின் அற்ப சந்தோஷத்திற்காக மனிதனை மனிதன் பகைப்பதும் அதனால் வரும் விளைவுகளால் துக்கிப்பதும் ஒரு தொடர் நிகழ்வாகிப் போகிறது. அந்தத் துக்கத்திலிருந்து மீள்வதற்கும் - பண்பட்ட மனிதனாக வாழ்வதற்கும் இந்த இதிகாசங்கள் ஒருவழிகாட்டியாக உள்ளன.
இந்தியாவின் பல்வேறு மொழிகளிலும் வழங்கப்படும் இந்த மாபெரும் மனித இலக்கியத்திற்கு காலந்தோரும் பல அறிஞர்கள் உரையும் பொருளும் எழுதியுள்ளனர். தமிழிலும் கவிதை நடையிலும் உரை நடையாகவும் பலபதிப்புகள் வந்துள்ளன.ஆயினும் அனைவரும் படிக்கத்தகுந்த எளிய உரைநடை வடிவில் மகாபாரதத்தை தமிழ் மக்களுக்கு தரவேண்டும் என்ற சிறந்த நோக்கோடு திரு ரங்கவாசன் வியாசர் அருளிய மகாபாரதம் என்ற நூலை எழுதியுள்ளார்.