book

யுத்தம் செய்யும் கலை

Yudhdham Seiyum Kalai

₹50+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஆர். நடராஜன்
பதிப்பகம் :கிழக்கு பதிப்பகம்
Publisher :Kizhakku Pathippagam
புத்தக வகை :சுய முன்னேற்றம்
பக்கங்கள் :88
பதிப்பு :1
Published on :2006
ISBN :9788183681919
குறிச்சொற்கள் :முயற்சி, திட்டம், உழைப்பு
Out of Stock
Add to Alert List

கிறிஸ்து பிறப்பதற்கு முந்நூறு ஆண்டுகளுக்கு முன்பு சன்-சூ என்பவரால் எழுதப்பட்ட உலகப் புகழ்பெற்ற நூல் The Art of War.மிக மிக வலிமையான கருத்துகளை சின்னச்சின்ன எளிமையான வாக்கியங்களில் முன்வைத்தஅற்புதமான நூல்.

மேலோட்டமாகப் பார்த்தால், இது யுத்தக் கலையைக் கற்றுக்கொடுக்கும் புத்தகம்.பிரமிக்க வைக்கும் போர் உத்திகள், யுத்தகளப் பயிற்சிகள், சூட்சுமமான மனப் பயிற்சிகள் என்று ஒரு போர் வீரனுக்குத் தேவையான அத்தனை அடிப்படைப் பாடங்களும் இந்நூலில் உள்ளன. சற்று கவனமாக அணுகினால், இதிலிருந்து பல நிர்வாகவியல் பாடங்களை நம்மால் கிரகித்துக்கொள்ள முடியும்.

பீரங்கி, துப்பாக்கி இவற்றைக் கொண்டுதான் யுத்தம் செய்யவேண்டும் என்றில்லை.வாழ்க்கையே ஒரு யுத்தகளம்தான்! முன்னேறத் துடிக்கும் அத்தனை பேருமே போர் வீரர்கள்.நம் அனைவருக்கும் தனித்தனியே பல இலக்குகள் உள்ளன. அவற்றை அடைய, நம் கண்களுக்குப் புலப்படாத பல எதிரிகளோடு நாம் அனைவரும் போராடிக்கொண்டு இருக்கிறோம்.

அந்த வகையில் இது ஒவ்வொரு மனிதனுக்கும் உதவக்கூடிய ஓர் உன்னதமான வாழ்வியல் நூலும் கூட.