book

கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத்தின் கருத்துரைகள்

Ganniyaththirkuriya Kaayithe Millaththin Karuththuraigal

₹70+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கே.எஸ்.அன்வர்பாட்சா
பதிப்பகம் :மணிமேகலை பிரசுரம்
Publisher :Manimegalai Prasuram
புத்தக வகை :வாழ்க்கை வரலாறு
பக்கங்கள் :256
பதிப்பு :1
Out of Stock
Add to Alert List

தலைவர் காயிதே மில்லத் அவர்கள் உடல்நலக் குறைவாக இருந்தும் கூட அலிகர் முஸ்லிம்களின் ஆவலை நிறைவேற்று    வதற்காக 5.5.1970ம் தேதி இரவு 11 மணியளவில் டில்லியிலிருந்து கார் மூலம் அலிகர் போய்ச் சேர்ந்தார்கள். கூட்டம் நள்ளிரவு ஒன்றரை மணிவரை நடந்தது தலைவர் அவர்களின் கருத்துச் செறிந்த சொற்பொழிவைக் கேட்ட மக்கள் ஆனந்தக் களிப்போடு “அல்லஹு அக்பர்” என விண்ணதிர முழங்கினர் அப்பொதுக் கூட்டத்தில் தலைவர் அவர்கள் பேசும்பொழுது கூறியதாவது

நாம் முஸ்லிம்களென்று நம்மைக் கூறிக்கொள்வதற்கு காரணம் நாம் இறைவனுடைய அடியார்களாக அவனது வேத கட்டளைகளுக்கு அடிபணிந்து நடப்பதுதான் நமக்கென்று தனி கலை கலாச்சாரம் ஆகிய வற்றைப் பேணிக் காத்து வருவதுதான் !

சிறுபான்மையினர் கடமைகள்

நாம் சிறுபான்மை மக்களாக வாழ்ந்து வருகிறோம் சிறுபான்மை மக்களுக்கு ஒற்றுமை மிகமிக அவசியம் பெரும்பானமை சமுதாயத்தினராக இருப்பவர்கள் எத்தனைக் கட்சிகளில் வேண்டு    மானாலும் பிரிந்து பிரிந்து வாழலாம் சிறுபான்மையினராக வாழும் முஸ்லிம்கள் பிரிந்து வாழ முடியாது; அவர்கள் சேர்ந்து வாழக் கடமைப்பட்டிருக்கிறார்கள் .

குர்ஆன் போதனை

நாம் ஒன்றுபட்டு வாழவேண்டுமென்பது நாமாகச் சொல்வதல்ல இது இறைவனின் கட்டளையாகும்

அல்லாஹ்வின் கயிற்றை இறுகப் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள் என இறைவனின் திருமறையாம் திருக்குர் ஆன் போதிக்கிறது நபி பெருமான் ( ஸல் ) அவர்களும் இதையே வலியுறுத்தியிருக்கிறார்கள் !

இறைவனின் போதனையை முஸ்லிம்கள் ஏற்று நடந்து ஒற்றுமையாக வாழ்ந்து வந்த காலம்வரை முஸ்லிம்கள் சிறப்பாகவே வாழ்ந்து வந்தனர் உலகத்தின் மிகப்பெரிய சாம்ராஜ்யங்களெல்லாம் அவர்களது காலடியில் வீழ்ந்தன முஸ்லிம்களின் கலையும் கலாச்சாரமும் உலகத்தில் மேலோங்கியே நின்றது இஸ்லாமிய மெய்ஞானம் உலகெல்லாம் சுடர்விட்டது