book

வைத்திய அம்மணியும் சொலவடை வாசம்பாவும்

Vaithya Ammaniyum Solavadai Vaasambavam

₹90+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ரேவதி
பதிப்பகம் :விகடன் பிரசுரம்
Publisher :Vikatan Prasuram
புத்தக வகை :மருத்துவம்
பக்கங்கள் :110
பதிப்பு :1
Published on :2014
ISBN :9788184765854
Add to Cart

ஃபாஸ்ட் புட் யுகத்திலிருந்து கொஞ்சம் விலகி வருவோமா? மாத்திரை மருத்துக்குக் கட்டுப்படாத நோயெல்லாம் மூலிகைக்குதான் கட்டுப்படுகிறது! கை வைத்தியம் எப்படி நம் உடலைப் பாதுகாக்கிறது என்பதைப் பற்றி இந்த நூலில் நூல் ஆசிரியர் ரேவதி விளக்கி எழுதியிருக்கிறார். பிரண்டைத் துவையலை சாப்பிட இன்றைய தலைமுறை விரும்புவதில்லை. ஆனால், அதில்தான் நோய்களை எதிர்க்கும் ஆற்றல் இருக்கிறது. பிரண்டையை நுனியாகப் பறிக்காமல் அடித் தண்டையும் சேர்த்துப் பறித்துச் சமைத்தால் அரிப்பும் எரிச்சலுமாக இருக்கும். வைத்தியம் மட்டும் தெரிந்திருந்தால் போதாது. சுவையாகச் சமைக்கவும் தெரிய வேண்டும். பிரண்டை நீர் சுண்டினால் உப்புபோல படியும். குழந்தைகளுக்கு வாந்தி பேதி வந்தால் இந்த உப்பு மருந்தாகப் பயன்படும். இடியையே தாங்குகிற சக்தி வரகில் இருப்பதால்தான் அதைக் கோயில் கும்பத்தில் வைத்துப் பத்திரப் படுத்துகிறார்கள். தூதுயிலைப் பொடி பல்லை வெள்ளை வெளேர் என்று ஆக்கும். இவை போன்ற நுணுக்கமான ஏராளமான வித்தைகளை இதில் அள்ளித் தெளித்திருக்கிறார் நூல் ஆசிரியர். டிவி ரசித்துக்கொண்டே சிப்ஸைக் கொரிப்பதில்லையா அதுபோல வெறும் கைவைத்தியத்தை மட்டும் எழுதாமல் ஆங்காங்கே சொலவடைகளைச் சேர்த்து சுவை கூட்டி எழுதியிருப்பது புதுமை! டாக்டர் விகடனில் வெளிவந்த தொடர் இப்போது நூல் வடிவில் உங்கள் கைகளில் தவழ்கிறது.