book

கவிமணியின் மலரும் மாலையும்

Kavimaniyin Malarum Maalaiyum

₹275+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :க. தேசிகவிநாயகம் பிள்ளை
பதிப்பகம் :சாரதா பதிப்பகம்
Publisher :Saratha Pathippagam
புத்தக வகை :இலக்கியம்
பக்கங்கள் :296
பதிப்பு :3
Published on :2012
Add to Cart

சுதந்திரப் போராட்டத்தில் மிதவாதத்தைப் பெரிதும் ஆதரித்த கவிஞர் கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை . காந்தி, பாரதி, போன்ற விடுதலைப் போராட்டத் தலைவர்கள் குறித்து கவிதைகள் புனைந்தவர், ஆராய்ச்சி, வரலாறு, அறிவியல், வாழ்வியல், குழந்தைகளுக்கு நல்லவை அறிவுறுத்துதல், இயற்கை, இறை வழிபாடு என பல துறைகளில் பாடல்கள் புனைந்தவர் , பெண்ணடிமைத் தனத்தை எதிர்தவர், தாழ்த்தப் பட்டவர்கள் மேம்பட தன் சிந்தனைகளை கவிதைகளாக பாடியவர், தமிழ்த் திரைத்துறையில் இவரது பாடல்கள் ஒலித்தது. தேச விடுதலைக்காகவும் , சமூக மலர்சிக்ககவும் இவரது கவிதைகள் முக்கிய பங்காற்றின. அறிவியல் கண்ணோட்டம் நிறைந்த இவர் அதனோடு கூட வரலாற்று நிகழ்வுகளின்மீது ஆர்வம் அதிகமுள்ளவராக இருந்ததாலும், மரபு வழிச் சிந்தனைகளுடன் நவீன சிந்தனைகளும் ஒருங்கே இணையப் பெற்றவராக இருந்தார். கவிமணி அவர்கள் கன்னியாகுமாரி மாவட்டத்தில் நாகர்கோவில் நகருக்கு அருகிலுள்ள தேரூர் எனும் சிற்றூரில் சிவதாணுபிள்ளை ஆதிலெட்சுமி ஆகியோருக்கு 1876-ம் ஆண்டு ஜூலை மாதம் 27-ந் தேதி பிறந்தார்.ஐந்து வயதில் தேரூர் ஆரம்பப் பள்ளியில் சேர்க்கப்பட்டார். ஒன்பதாவது வயதில் தந்தையை இழந்தார். அந்தக் காலகட்டத்தில் அவர் வாழ்ந்த பகுதி கேரள மாநிலத்தைச் சேர்ந்திருந்ததால் அவரின் பள்ளிப்படிப்பு முழுவதும் மலையாள மொழியிலேயே அமைந்திருந்தது, திருவாவடுதுறை மடத் தலைவர் சாந்தலிங்கத் தம்பிரானிடம் தமிழ் இலக்கிய, இலக்கணங்களைக் கற்றுத் தேர்ந்தார்.சொல் அமுதாய் இனிக்கும் எளிமையும் இனிமையும் நிறைந்த “மலரும் மாலையும்” என்ற இவரது கவிதைத் தொகுப்பை பலரும் போற்றினார்கள் . நாட்டின் பண்டைய வரலாற்றை அறிந்து கொள்ளும் ஆர்வம் காரணமாக கல்வெட்டு ஆராய்ச்சிகளில் ஈடுபட்டார்.