
தன்னலமற்ற தலைசிறந்த தலைவர்கள்
₹60+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :தமிழில்: மதுரை பாபாராஜ்
பதிப்பகம் :Apple Books
புத்தக வகை :பொது
பக்கங்கள் :160
பதிப்பு :1
Published on :2010
ISBN :9788179046388
Out of StockAdd to Alert List
கலை, கலாசாரம், அரசியல், வரலாறு, பூகோள ரீதியாக உலக வரலாற்றில் இந்தியா பெற்றிருக்கும் இடம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. அதற்குக் காரணம் - மன்னர்களின் ஆட்சிக் காலத்தில் மக்களைக் காத்த அரசர்களும், இந்திய சுதந்திரத்துக்குப் போராடிய காலத்தில் மக்களை வழிநடத்திச் சென்ற தலைவர்களும்தான்! ஒரு நாட்டுக்கும் சரி, ஒரு நிறுவனத்துக்கும் சரி... அதன் தலைவர்களாக இருப்பவர்கள், பிரச்னைகளை எவ்வாறெல்லாம் எதிர்கொண்டு வெற்றி பெறுகிறார்கள் என்பதை இன்றைய இளைஞர்கள் தெரிந்துகொள்ள வேண்டியது மிகவும் அவசியம். சவால்களைச் சந்திக்கும் வலிமையையும், அறிவையும் பெற்று தலைமைப் பண்பை வளர்த்துக் கொள்வது எப்படி என்பதை விரிவாக விளக்குகிறது, இந்த நூல். காந்தி, நேரு, படேல், பெரியார், அண்ணா, காமராஜர்... இப்படி, மக்கள் நலனுக்காக செயல்களில் உறுதியாக இருந்து, கடமை உணர்வுடன் செயல்பட்ட ஒவ்வொருவரும் தலைமை இடத்துக்கு எப்படி வந்தார்கள் என்பதை சுவையான சம்பவங்களோடு விவரிக்கிறார், நூலாசிரியர்.
