book

என்றென்றும் பெண்கள்

₹85+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ப. திருமலை
பதிப்பகம் :மண் மக்கள் மனிதம் வெளியீடு
Publisher :Mann Makkal Manitham Veliyedu
புத்தக வகை :
பக்கங்கள் :72
பதிப்பு :1
Published on :2023
Add to Cart

தமிழ்ச் சமூகத்துக்குப் பெண்ணின் பெருமையை எடுத்தியம்பும் வகையில் 'பெண்ணே பேராற்றல்' என்னும் நூலினை வெளியிட்ட, 'மண், மக்கள், மனிதம் வெளியீடு' அதே உற்சாகத்துடனும், பெண்மையைப் போற்றும் வகையிலும் 'என்றென்றும் பெண்கள் நூலினை வெளிக்கொண்டு வருகிறது. பெண்கள் என்றும் பெருமைக்குரியவர்கள். சங்க காலத்தில் பெண்பாற் புலவர்கள் அரசவையை தங்களது அறிவார்ந்த சிந்தையால் செழுமைப்படுத்தியிருக்கிறார்கள். 'தையலை உயர்வு செய்' என்றும் 'ஆணுக்குப் பெண்ணிங்கே இளைப்பில்லை' என்றும் சமத்துவம் பேசினார் பாரதியார். விடுதலைக்குப் பின் ஏற்பட்ட விழிப்புணர்ச்சி காரணமாக பெண்கள் நிலை சற்று மேம்பட்டது. அதன் விளைவாக இன்று பெண்கள் கல்வி, கேள்விகளில் தேர்ச்சி பெற்று, பல துறைகளிலும் ஞானம் பெற்றவர்களாக விளங்குகின்றனர். ஆனால், பூமியை, தேசத்தை, நதியைப் பெண்ணாகப் பார்க்கும் பாரம்பரியம் கொண்ட பாரதத்தில்தான் சிறுமிகள்கூட பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகின்றனர். இந்த நிலை மாறவேண்டும். ஆண்கள் தங்களை மாற்றிக்கொள்ள வேண்டும்.