
கருங்குயில்
₹200+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஷோபா சக்தி
பதிப்பகம் :கருப்புப் பிரதிகள்
Publisher :Karuppu Pradhigal
புத்தக வகை :சிறுகதைகள்
பக்கங்கள் :164
பதிப்பு :1
Published on :2023
ISBN :9789395256254
Out of StockAdd to Alert List
நூல் குறிப்பு
ஷோபாசக்தியின் அய்ந்தாவது சிறுகதைத் தொகுப்பு.
2022 நவம்பர் – டிசம்பர் காலப்பகுதியில் எழுதப்பட்ட இந்தக் கதைகள் இனம், நிறம், சாதியொடுக்குமுறை, புலம் பெயர் வாழ்வு ஆகிய புள்ளிகளில் முகிழ்த்து; மனித மனங்களினதும் இலங்கை நிலத்தினதும் சிக்கலான தருணங்களை எளிமையும் கூர்மையுமான மொழியில் விரித்துச் சொல்கின்றன. வரலாற்றில் முற்றாகவே மறைக்கப்பட்ட அல்லது திரிபுபட்ட உண்மைகளைப் புனைவுமொழியின் சாத்தியங்களால் கண்டடைகின்றன.
ஆசிரியர் குறிப்பு;
ஷோபாசக்தி 1967 ஆம் ஆண்டு வட இலங்கையில் அல்லைப்பிட்டி என்ற தீவகக் கிராமத்தில் பிறந்தவர். அரசியல் அகதியாக 1990 இல் தாய்லாந்துக்கும் 1993 இல் பிரான்சுக்கும் புலம் பெயர்ந்தவர்.
சிறுகதை, நாவல், திறனாய்வு, பதிப்பு என இலக்கியத்தில் இயங்கி வரும் இவருடைய நாவல்களும் சிறுகதைகளும் மொழிபெயர்க்கப்பட்டு மலையாளம், பிரெஞ்சு, ஆங்கிலம், சிங்களம், ஜெர்மன் ஆகிய மொழிகளில் வெளியாகியுள்ளன.
நடிகராகவும் கதாசிரியராகவும் தமிழ், பிரெஞ்சு, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் திரைப்படம் மற்றும் நாடகங்களில் செயற்படுகிறார். கலை மற்றும் சினிமாவுக்கான பிரெஞ்சு அகாதமியின் உறுப்பினர்.
