book

கோலப்பனின் அடவுகள்

₹299+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பிரபு தர்மராஜ்
பதிப்பகம் :எதிர் வெளியீடு
Publisher :Ethir Veliyedu
புத்தக வகை :சிறுகதைகள்
பக்கங்கள் :219
பதிப்பு :1
Published on :2024
ISBN :9788119576319
Add to Cart

ஒரு உண் குழாய் சேனல் ஆரம்பித்தால் கூட நகைச்சுவை காணொளிகள் தான் மக்களை அதிகம் சென்றடையும். சார்லி சாப்ளின் கூட தனது நகைச்சுவை வழி பல பெரிய விஷயங்களை மக்களிடம் சேர்த்து அமெரிக்காவிடமே பொல்லாப்பை பெற்றார் என வரலாறு கூறுகிறது. எனவே நகைச்சுவை என்பதே ஒரு அலாதியான மகிழ்ச்சிதான். அப்படியாக தமிழ் இலக்கியத்தில் கொஞ்சம் நகைச்சுவையை சுண்டி விட்ட புத்தகங்களில் கோலப்பனின் அடவுகளும் அடங்கும்.
கோலப்பன் கடவுளரின் 6 நாள் வேலையில் பூமியில் யாருக்கும் தெரியாமல் பிறந்த அறிவு ஜீவி. கோலப்பன் அவரது மனைவி, பாப்பச்சன் மூவரும் முக்கிய மாந்தர்களாக உள்ளனர். கோல் என்பதை கோள்களுக்கு அப்பன், கோல் மூட்டி, பெரிய கோல் கொண்டவர் என எப்படி வேண்டுமானாலும் அர்த்தம் கொள்ளலாம். கோலப்பனின் சேஷ்டைகளை கன்னியாகுமரி தமிழில் வழங்குவதே இந்த புத்தகம். சிரிக்காமல் இந்த புத்தகத்தை ஒருவர் முழுதாக படித்தால் அவர் பெரிய சாதனைக்காரர் என கொள்ளலாம்.
இந்த புத்தகம் மூலம் அரிய கன்னி யா குமரி தமிழை நானும் கற்று வருகிறேன். கும்பி, பெகளம் போன்ற அரிய சொற்களை கற்க முடிந்தது. அடுத்து அண்ணார் Prabhu Dharmaraj அவர்களின் ழ் என்ற காவியத்தை ஆர்டர் போட்டுள்ளேன். ஏற்கனவே அவரின் 3 புஸ்குகள் புஸ்காக அல்லாமல் ஈ புக்காக தான் கிடைக்கிறது. மன வருத்தங்கள் தோழர். மொத்தத்தில் நல்ல சாலியான புத்தகம்.