book

ஜெகம் ஆளும் மகம் (மகம் நட்சத்திரதாரர்கள் பற்றி All in All)

₹220+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஸ்வாமி கண்ணன் பட்டாச்சார்யா, காஷ்யபன்
பதிப்பகம் :தங்க தாமரை பதிப்பகம்
Publisher :Thanga Thamarai Pathippagam
புத்தக வகை :ஜோதிடம்
பக்கங்கள் :175
பதிப்பு :1
Published on :2023
ISBN :9789394977105
Add to Cart

மகம் ஜெகத்தை ஆளும்” என்பது ஒரு தமிழ் முதுமொழி. தற்போது தமிழ் ஜெகத்தை ஆண்டு கொண்டிருக்கும் அரசியும் மகத்தில் பிறந்தவர் என்பதாலேயே இந்த ஜோதிட மொழியின் மகத்துவம் நம் அனைவருக்கும் தெளிவாகப் புரியும்.

மொத்தமுள்ள இருபத்தியேழு நட்சத்திரங்களில், மகத்திற்கு மட்டும் இத்தனை சிறப்பான ஒரு அடைமொழியுடன் கூடிய பெருமைகள் ஏன்?...

ஜோதிடத்தில் இதுவரை யாருமே விளக்காத, ஒரு விஞ்ஞானப் பார்வையுடன் கூடிய, மகத்திற்கு மட்டுமே உள்ள மகத்துவத்தை, மகத்தின் சிறப்பில் உள்ள சூட்சுமத்தை இப்போது விளக்குகிறேன். தெரிந்து கொள்ளலாம் .வாருங்கள்.

ஜோதிடம் உணரப்பட்ட காலத்தில் வானில் ஒரு கட்டுக்கோப்புக்குள் அமைந்து நிலையான இயக்கங்களைக் கொண்ட கிரகங்களும், நட்சத்திரங்களும் பூமியில் உள்ள மனிதனைக் கட்டுப்படுத்தி இயக்குவதை உணர்ந்த நமது தெய்வாம்சம் பொருந்திய ஞானிகள், நம்மைச் சுற்றியுள்ள 360 டிகிரி கொண்ட இந்த வானத்தை பனிரெண்டு பிரிவுகளாக தலா 30 டிகிரி கொண்ட ராசியாக மேஷம் முதல் மீனம் என்று பெயரிட்டு பனிரெண்டு ராசிகளாக அமைத்தார்கள்.

நம்மைச் சுற்றி வியாபித்திருக்கும் இந்த ராசி எனும் விண்வெளியில் பூமிக்குத் தங்கள் கதிராற்றல்களைச் செலுத்தும் நட்சத்திரக் கூட்டங்கள் 27 என்று அறியப்பட்டு, இவைகளின் தூரங்கள் மற்றும் கதிர்வீச்சு அளவுகளின் ஏற்ற இறக்கங்கள் நமது ரிஷிகளால் துல்லியமாகக் கணிக்கப்பட்டு, ராசிகளில் நட்சத்திரங்களின் பங்களிப்பு நமக்குப் போதிக்கப்பட்டது.

மேலே சொல்லப்பட்ட மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளும் அதன் நெருப்பு நிலம் காற்று நீர்த் தத்துவங்களுக்கேற்பவும் அவற்றின் இயக்கங்களுக்கேற்பவும் மூன்று பகுதியாக தலா நான்கு, நான்கு ராசிகளாய்ப் பிரிக்கப்பட்டிருக்கின்றன.