book

நாலு வரி நோட்டு

₹370+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :என். சொக்கன்
பதிப்பகம் :எழுத்து
Publisher :Ezhuttu
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :
பதிப்பு :1
Published on :2023
Out of Stock
Add to Alert List

தமிழர்கள் பாடல்களோடு வளர்கிறவர்கள், பாடல்களில் திளைக்கிறவர்கள், பாடல்களை ரசித்து அனுபவித்துப் பாராட்டுகிறவர்கள். அவர்களுடைய ரசனைக்குத் தீனி போடுவதற்காகவே இங்கு பல இசையமைப்பாளர்களும் பாடகர்களும் கவிஞர்களும் மிகச் சிறந்த படைப்பூக்கத்துடன் செயல்பட்டிருக்கிறார்கள், கேட்கக் கேட்கச் சுவை கூடும் ஆயிரக்கணக்கான பாடல்களை வழங்கியிருக்கிறார்கள். ஆனால், திரைப்படப் பாடல் வரிகள் என்பவை வெறுமனே மெட்டுக்கு நிரப்பப்பட்ட சொற்கள் என்கிற எண்ணமும் இங்கு பலருக்கு இருக்கிறது. சும்மா மானே, தேனேன்னு எதையாவது எழுதி நிரப்பிடுவாங்கய்யா என்று அலட்சியமாகச் சொல்கிற பலரை நாம் பார்த்திருக்கிறோம். உண்மையில், மொழியை அப்படி அக்கறையின்றிக் கையாண்டால் அது இத்தனை இதயங்களைத் தொடாது. ஒவ்வொரு பாடலாசிரியரும் ஒவ்வொரு வரிக்கும் கொடுக்கிற உழைப்பும் முனைப்பும் அந்தப் பாடல்கள் நம் மனத்தில் சென்று சேர்வதற்கான முதன்மைக் காரணங்களில் ஒன்று. அந்தவிதத்தில் தமிழ்த் திரையுலகம் கொடுத்துவைத்தது, ஒவ்வொரு காலகட்டத்திலும் எண்ணற்ற சிறந்த பாடலாசிரியர்கள் நமக்காக எழுதியிருக்கிறார்கள், தமிழை வளப்படுத்தியிருக்கிறார்கள். என். சொக்கனின் இந்த நூல், தமிழ்த் திரைப்படப் பாடல் வரிகளை எடுத்துக்கொண்டு பல சுவையான விஷயங்களை ரசனையுடன் பேசுகிறது. இலக்கணம், இலக்கியம், பண்பாடு, வரலாறு, அறிவியல்... உள்ளே வாருங்கள், சினிமாப் பாடல் வரிகளுக்குள் இத்தனை சுவையா! என்று வியந்து நிற்பீர்கள்.