book

சிந்தனையே சாதனை

₹50+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :மெர்வின்
பதிப்பகம் :குமரன் பதிப்பகம்
Publisher :Kumaran Pathippagam
புத்தக வகை :சுய முன்னேற்றம்
பக்கங்கள் :192
பதிப்பு :1
Published on :2009
குறிச்சொற்கள் :முயற்சி, உழைப்பு, வெற்றி, குறிக்கோள்
Out of Stock
Add to Alert List

வாழ்க்கையின் வெற்றிக்கு அடித்தளமாக அமைவது சிந்தனைதான். இது வெளிவாக இருந்தால் எந்தச் செயலும் வெற்றி கரமாக அமையும். ஆண்டவன் நம்மை மனிதனாகப் படைத்து இருப்பது எதற்கு என்றால் ,சிந்தனை செய்து, செயல் புரிந்து, சாதனையின் சின்னமாகச் சரித்திரத்தில் இடம் பெறுவதற்குத்தான்.  இதில் சந்தேகமே இல்லை. எப்படியெனில் ,நாம் மட்டும்தான் சிந்திக்க முடியும் . ஆறறிவு படைத்த நம்மால் தான்  சிந்தித்து செயலாற்ற முடியும். சிந்தனை சிறப்புக்குரியது. செயலுக்கு வித்தாகிறது. சிந்திப்பதற்கும் செயல்படுவதற்கும் சாதனை புரிவதற்கும் மட்டுமே மனிதனாக -மாண்பு பெற்றவனாக -மதிப்பு நிறைந்தவனாக உருவாக்கப் பட்டிருக்கிறோம் என்பது வெளிவான உண்மை. சிந்தனையை எப்படியெல்லாம்  பயன்படுத்த வேண்டும் ,எந்த முறையில் செயலாற்ற வேண்டும் என்பதனை இந்நூலில் திரு.மெர்வின் மிகவும்  தெளிவாக  விளக்கியிருக்கிறார்.