book

சினிமாத்துவம் – காட்சி எந்திரங்களும் காணும் எந்திரங்களும்

₹340+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஜமாலன்
பதிப்பகம் :பாரதி புத்தகாலயம்
Publisher :Bharathi Puthakalayam
புத்தக வகை :சினிமா
பக்கங்கள் :336
பதிப்பு :1
Published on :2022
Out of Stock
Add to Alert List

அதனால்தான் சினிமா ஒரு கலை அல்ல கலை போன்ற பிறிதொன்று, அதனை சினிமா அல்லது திரையா்க்கம் என்றே அழைக்க வேண்டும். இதன்பொருள் திரையாக்கம் என்பது கலை போன்று ஒரு புதிய அறிதல் வடிவம் என்பதே. நமது புறஉலகை அகஉலகின் திரையாக்கமாக மாற்றிய ஒன்றே சினிமாவின் உடலரசியல் வினை. அவ்வினையின் விளைவு, சினிமா ஒரு சமூகத்தை வடிவமைப்பதாக, புழங்குலகை வழக்குலகாக (actualized world) உருவமைப்பதாக உள்ளது. எளிமையாகச் சொன்னால், சினிமா எனும் திரையாக்கம் யதார்த்தத்தை பிரதிபலிப்பதில்லை, மாறாக, யதார்த்தத்தை கட்டமைக்கிறது மற்றும் உருவமைக்கிறது. பார்வையாளர் என்ற காணும் எந்திரங்களை தனது திரையாக்க காட்சி எந்திரம் வழியாக உருவாக்குகிறது. அவ்வகையில் சினிமா மற்ற துறைகளைவிட அதிக சமூகவியல், சமூக உளவியல், சமூக அரசியல் ஆய்விற்கு உட்படுத்தவேண்டிய அவசியம் உள்ளது. அதற்கான ஒரு முன்முயற்சியே இத்தொகுப்பு.