book

ஏறிக் குதித்திட ஓர் ஏழடிச் சுவர்

₹150+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பாரதி பாஸ்கர்
பதிப்பகம் :கவிதா பப்ளிகேஷன்
Publisher :Kavitha Publication
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :160
பதிப்பு :1
Published on :2022
ISBN :9789388450829
Out of Stock
Add to Alert List

சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி எந்த மதத்தைச் சேர்ந்தவர்  என்று அபூர்வமான  ஆராய்ச்சிகள் நடக்கும்போது பல பேர் வலைதளங்களில் பதிவிட்டார்கள் -"தீவிரவாதிக்கு மதம் இருக்க முடியாது; தீவிரவாதி  செலுத்தப்பட்டவன்; அவனுக்கு எண்ணங்கள் இல்லை, உணர்ச்சிகள் இல்லை, சரி-தவறு என்கிற பேதங்கள் இல்லை.  அவன் வில்லில் இருந்து எய்தப்பட்ட அம்பு' - என்று.

சரி, தீவிரவாதத்தினால் பாதிக்கப்பட்டவர்கள்? பெரும்பாலும் குரலற்றவர்கள். தீவிரவாதத்தினால் இறந்தவர்கள் பரிதாபத்துக்குரியவர்கள் எனின்,  உயிரோடு பிழைத்தவர்கள், பாரம் சுமப்பவர்கள். ஆன்மாவோடு பிணைந்த உறவுகளை, உடைமைகளை, உடலின் பகுதிகளை பறி கொடுத்த பின்னும், குமுறும் உள்ளங்களோடு சிதறிய மிச்ச  வாழ்வை வாழ்ந்து தீர்ப்பவர்கள்.

தீவிரவாதியின் மதம் பற்றிப் பேசுவதைவிட, பாதிக்கப்பட்டவரின் மனம் பற்றிப் பேசலாம்  - சிதறிய பின்னும் எழுந்து நின்ற மனங்கள் ! 

'நாடியா  முராட்' போல...
சரியாக மூன்று வருஷம் முன்பு - 2016-ஆம் ஆண்டு மே மாதம், நாடியா முராட்-அமால் க்ளூனி  சந்திப்பு நடந்தது. இருவரும் பெண்கள் என்பதைத் தாண்டி எந்த ஒற்றுமையும் இல்லாதவர்கள். இரு வேறு துருவங்கள்.

அமால் பிரமிக்க வைக்கிற பேரழகுப் பெண். சரியான உயரமும்  விளம்பர மாடல்களின் உடல் அமைப்பும் கொண்டவர். அவர் அணியும் விலை உயர்ந்த ஆடைகளைப் பற்றிய  தகவல்களைப் பகிர ஒரு இணையதளமே ("வெப்சைட்') இருக்கிறது. ஆக்ஸ்போர்டு- இல் படித்து , நியூயார்க்கில் வழக்குரைஞர் தொழில் செய்யும் மாபெரும் பணக்காரப் பெண்.