book

கடவுள் தொடங்கிய இடம்

₹200+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :அ. முத்துலிங்கம்
பதிப்பகம் :நற்றிணை பதிப்பகம்
Publisher :Natrinai Pathippagam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :175
பதிப்பு :1
Published on :2022
ISBN :9788194966005
Add to Cart

'கடவுள் தொடங்கிய இடம்' நாவல் 1992 இல் இருந்து 2003 வரை நடப்பதாக எழுதப்பட்டது. இந்தக் காலகட்டத்தில் புலம்பெயர்ந்தவர்களைப் பற்றி இந்த நாவல் பேசுகிறது. >ஒரு நாட்டில் நடக்கும் கொடுமைகளுக்கு அஞ்சிப் புலம்பெயர்பவர்கள் இருக்கிறார்கள். அடக்குமுறையை எதிர்த்தும், இன அழிப்பைத் தாங்கமுடியாமலும் புலம்பெயர்பவர்கள் உண்டு. வறுமை காரணமாகவும் புலம்பெயர்வார்கள். ஆதியிலிருந்து புலப்பெயர்வு நிகழ்ந்துகொண்டேதான் இருக்கிறது. >1986 இல் இரண்டு படகுகளில் 1.55 தமிழ் அகதிகள் கனடாளுக்குப் புறப்பட்டனர். ஒரு படகில் மட்டுமே எஞ்சின் இருந்ததால் மற்றொரு படகு கயிறுகட்டி இழுக்கப்பட்டது. மூன்று நாளாக அதில் பயணம் செய்தவர்களுக்கு உணவும் தண்ணீரும் இல்ல எல்லை தெரியாத அட்லாண்டிக் சமுத்திரத்தில் திசையறியாமல் படகுகள் தத்தனித்தன. படகின் விளிம்பு தண்ணீரைத் தொட்டது. யாராவது எழும்பி நின்றால் படகு கவிழ்ந்துவிடும். ஒரு கைக்குழந்தை மூன்று நாளும் தொடர்ந்து அழுதது. அதன் தாயார் வெறுத்துப்போய் குழந்தையைக் கடலில் வீச எழுந்து நின்றபோது படகு தளும்பியது. மற்றவர்கள் அலறிப் பாய்ந்து தடுத்தனர். இன்று அந்தக் குழந்தை கனடாவில் புகழ்பெற்ற மருத்துவர். >அன்பினால்தான் இந்த உலகம் இயங்குகிறது. ஒரு ஜேர்மன்காரன் பணத்துக்கு ஆசைப்பட்டு இரண்டு படகுகளையும் தத்தளிக்க விட்டுவிட்டு மறைந்து போகிறான். வேறு ஒரு கனடியன் அவர்களைக் காப்பாற்றி கரை சேர்க்கிறான். எத்தனை கொடூரம் நடந்தாலும், அடக்குமுறை ஓங்கினாலும், துரோகம் கூடினாலும் உலகம் அன்பினால் மீட்கப்படுகிறது.