book

கல்லாடம் மூலமும் உரையும்

₹495+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கல்லாடனார்
பதிப்பகம் :தமிழ்மண் பதிப்பகம்
Publisher :Tamilmann Pathippagam
புத்தக வகை :இலக்கியம்
பக்கங்கள் :528
பதிப்பு :2
Published on :2017
Add to Cart

சைவத் திருமுறைகளில் ஒன்றான எட்டாம் திருமுறையின் ஒரு பகுதியான திருக்கோவையாருள் நூறு துறைகளைத் தேர்ந்தெடுத்து, அதன் பொருள். அமைப்பினைக் கொண்டு பாடப் பெற்றது. பாடியவர் கல்லாடர். எனவே கல்லாடம் என்ற பெயர் கொண்டது.சங்க இலக்கிய நடையில் அகப்பொருள் செய்திகளை முறையாகக் கொண்டு பாடப் பெற்றது. ஒவ்வொரு பாடலிலும் மதுரை சோமசுந்தரக் கடவுளின் திருவிளையாடல் கதை ஒன்று அமைந்துள்ளது. எல்லாத் திருவிளையாடற் கதைகளும் இடம் பெற்றதோடு, பெரிய புராண வரலாற்று நிகழ்வுகளில் ஒருசிலவற்றையும் இராமாயணம், மகாபாரதம் 'கதை நிகழ்வுகளையும் சுருங்கக் குறிப்பிடுகிறது. மதுரையும். திருப்பரங்குன்றமும் அழகிய வருணனையோடு குறிக்கப் பெற்றுள்ளன. உலகியல் செய்திகளும் சிறந்த உவமைகளும் சில பழமொழிகளுள் சிறப்பாகக் காட்டப் பெற்றுள்ளன. நூலில் இடம் பெற்ற நூறு செய்யுட்களும் யாப்பு, அணி, மற்றும் பொருள் அமைப்பிலும் சிறப்பாகத் திகழ்கின்றன. ஆசிரியப்பாவின் சிறப்பு அனைத்தையும் ஒருங்கே இந்நூலில் காணலாம். இந்நூலைப் பயின்றால் தமிழறிவு மிக்கு விளங்கும் என்பதால் 'கல்லாடம் கற்றவனோடு சொல்லாடாதே' என்ற பழமொழி தமிழ் உலகில் வழங்கலாயிற்று. வரலாறு அறிய இயலாத கல்லாடர் என்ற மாபெரும் புலவர் பாடிய சங்க இலக்கிய நடையை ஒத்த இந்நூல் தமிழ் இலக்கிய வகையில் குறிப்பிடத்தக்கதாகும்.