book

தவளை நெரிக்கப்பட்ட குரல்

₹30+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கோவை சதாசிவம்
பதிப்பகம் :குறிஞ்சி பதிப்பகம் (வனத்துக்குள் திருப்பூர்)
Publisher :Kurinji Pathippagam (vanathukkul Thirupur)
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :32
பதிப்பு :1
Published on :2017
Out of Stock
Add to Alert List

நீரிலும், நிலத்திலும் வாழும் (இருவாழ்விகள்) தகவமைப்பைப்பெற்று சுமார் 36- கோடி ஆண்டுகளுக்கு முன்பு முதுகெலும்பு உடைய மீனிலிருந்து இயற்கையால் தோற்றுவிக்கப்பட்ட உயிரினம் தான் தவளை நிலத்தில் முதன் முதலில் தோன்றிய நான்கு கால்கள் கொண்ட உயிரினமும் இதுதான்! நாளொன்று நூற்றுக்கணக்கில் பூச்சிகளைத்தின்று பெருகும் பூச்சியினங்களை கட்டுப்படுத்தும் இயற்கையின் ஆதார சக்தியும் தவளைகள் தான்! தவளைகள் முட்டையிட்டு குஞ்சு பொறிப்பவை. தவளைகளின் முட்டையில் இருந்து வெளியே வரும் குஞ்சுகளைத்தான் நாம் தலப்பிரட்டை என்கிறோம்! தவளைக் குஞ்சுகளின் முதன்மை உணவு கொசுக்களாகும். கிணறு, குட்டை , குளம், ஏரி போன்ற நன்னீரகங்கள் ஆலைக்கழிவுகளில் நச்சுக் கிடங்காய் உருமாற்றிய பிறகு... தவளை இனங்கள் அற்றும், அருகியும் வருகின்றன. தவளைகளை அழித்த பாவம் மனிதர்களை டெங்கு, மலேரியா, சிக்குன் - குனியாவென்று வாட்டுகிறது! வடகிழக்கு பருவ மழை தொடங்கும் நாளில் குழுவாகக்கூடி இரவெல்லாம் மழைப்பாடலை இசைத்து மகிழ்ந்த தவளைகளின் குரல் புதிய தலை முறையின் செவிகளுக்கு எட்டாத ஒன்று! கடந்த முப்பது ஆண்டுகளில் சுமார் 190 - வகையான தவளையினங்கள் இப்பூவுலகில் பூண்டோடு அழிந்து விட்டன. மீதப்பட்ட தவளையினங்களை காப்பாற்றும் கரிசனத்தை வாசகப்பரபிற்கு கொண்டு வரும் முயற்சியே தவளை: நெரிக்கப்பட்ட குரல்.