
பேரரசின் யுகம் (1875-1914)
₹0+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :எரிக் ஹோப்ஸ்பாம்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :மொழிபெயர்ப்பு
பக்கங்கள் :
பதிப்பு :1
Published on :2022
Out of StockAdd to Alert List
1875 ஆம் ஆண்டை ஏகாதிபத்தியத்தின் துவக்கம் எனலாம்.
1914 ஆம் ஆண்டு முதல் உலக யுத்தத்தின் துவக்கம். உலகப் போர் என்ற சொல் கவனத்திற்குரியது. ஒரு வட்டாரப் பிரச்சினையை, உலகப் பிரச்சினையாக்கி பின்னர் அதனை உலகப்போராக்கும் வழக்கம் இப்போதுதான் தொடங்கியது. ஒரு பேரரசு உலக அளவில் தனது அதிகாரத்தைப் பரப்பும் வழக்கம் இப்படித்தான் தொடங்கியது. ஒரு நாட்டை ஒன்றுபடுத்தும் அதிகாரம் கொண்ட அரசு தேசிய அரசு எனப்பட்டது. காலனிய நிலப்பரப்புக்கான வேட்டை தொடங்கியதும் இக்காலத்தில் தான். நில அபளிப்பு முக்கியமானதாயிற்று பிரிட்டிஷ் பேரரசு உலகத்தின் தொழில் பட்டறை' என்ற பெயரைத் தாண்டி பேரரசு என்ற பெயரை ஈட்டியது.
உலக நாடுகள் தேசியம், தொழிலாளர் இயக்கம், புரட்சிகர இயங்கங்கள் போன்ற அத்தனை முரண்பாடுகளையும் கொண்டிருந்த காலம் அது தொலைபேசி, திரைப்படம், செய்தித்தான் ஆரியன் உலகம் முழுவதும் பரவலாகின. செய்தித் நாள்கள்தாம் தேரியம் என்ற உணர்வை உண்டாக்கின என்று ஓர் ஆய்வாளர் எழுதினார்.
19 ஆம் நூற்றாண்டின் இறுதியில் தோன்றிய பொருளாதார நெருக்கடி முதல் உலகப் போரை முன்னறிவித்தது. நாடுகள் வளர்ச்சியடைந்தவை, வளர்ச்சி அடையாதவை எனப் பிரித்துக் காட்டப்பட்டன. ஐரோப்பாவின் 1015 நாடுகள் உலகம் முழுவதையும் கட்டுப்படுத்தின. பொருளாதார நெருக்கடியை அவற்றால் போராக மாற்ற முடியும்.
