book

எட்டாயிரம் தலைமுறை (தமிழக அரசு விருது பெற்ற நூல்)

₹170+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :தமிழ்மகன்
பதிப்பகம் :எழுத்து
Publisher :Ezhuttu
புத்தக வகை :சிறுகதைகள்
பக்கங்கள் :
பதிப்பு :1
Published on :2020
ISBN :9789388860710
குறிச்சொற்கள் :தமிழக அரசு விருது பெற்ற நூல்
Out of Stock
Add to Alert List

புதுமைப்பித்தன், ந.பிச்சமூர்த்தி, கு.ப.ரா., மௌனி போன்றவர்களை முன்னோடிகளாகக் கொண்ட தீவிர இலக்கியச் சிறுகதைப் போக்கின் வாரிசு அல்ல தமிழ்மகன். அதே சமயம் இன்றைய வெகுஜனச் சிறுகதைகளின் கிளுகிளுப்புகளும் அபத்தங்களும் கொண்ட கதைகளை எழுதுபவரும் அல்ல. தரமான வெகுமக்கள் சிறுகதைகளுக்குத் தமிழ்மகனின் கதைகளைச் சிறந்த உதாரணமாகக் குறிப்பிடலாம். அப்படியொரு வெகுஜனக் கதை மரபு தமிழில் ஒரு காலத்தில் இருந்து, இன்று காணாமல் போய்விட்ட அல்லது தரம் தாழ்ந்துவிட்ட சூழ்நிலையில், தமிழ்மகனின் கதைகள் கவனிப்புக்குரியவையாகின்றன. தீவிர இலக்கியவாதிகளும் பொருட்படுத்தி வாசிக்கத் தகுந்தவையாகின்றன என்பது என் நம்பிக்கை. - ராஜமார்த்தாண்டன்