book

மெனிஞ்சியோமா

₹140+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கசேணகுமாரன்
பதிப்பகம் :எழுத்து
Publisher :Ezhuttu
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :
பதிப்பு :1
Published on :2022
Out of Stock
Add to Alert List

மார்ச்சுவரியின் ஒவ்வொரு இழுப்பறையாக திறந்து பார்ப்பது போல் ஒரு மெல்லிய பதற்றத்தை ஒவ்வொரு பக்கத்திலும் பரப்பி வைத்திருக்கிறான் சந்துரு. ஒரு நத்தை தன் கூட்டை இழந்து வெயிலில் அதன் மெல்லுடல் மின்னும் தகிப்பு அவனது தனிமையின் கதறலில் எதிரொலிக்கிறது. அந்தத் தகப்பனின் பரிதவிப்பு உருவாக்கும் கழிவிரக்கம், காயமுற்று சீழ் பிடித்த பாகத்தை அறுத்தெரியும் வலி, பிறப்புறுப்பில் கீறி மருந்திட்ட நிலையில் சந்துரு உச்சம் எய்துவதாய் எழுதப்பட்டிருக்கும் வரி ஒரு வலிக்கொண்டாடியால் மட்டும் எய்தக்கூடிய பித்தம். - நேசமித்ரன்