book

யாழ்ப்பாண சமூக உருவாக்கமும் விபுலானந்தரும்

Yaalpana Samuha Uruvakkamum Vibulanantharum

₹0+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :அ.கௌரிகாந்தன்
பதிப்பகம் :எழுநா வெளியீடு
Publisher :Ezhuna Veliyedu
புத்தக வகை :ஆய்வுக் கட்டுரைகள்
பக்கங்கள் :
பதிப்பு :1
Published on :2013
Out of Stock
Add to Alert List

…1920 களில் யாழ்குடாநாட்டில் நிகழ்ந்த சமூக உருவாக்கத்தினை முதன்மை மையப் பொருளாகக்கொண்டு, அச்சமூக உருவாக்கத்தில் பங்காற்றிய சிந்தனைப் போக்குகளின் பிரதிநிதிகளில் கனமிகு பாத்திரத்தை வகித்த யாழ் வாலிபர் காங்கிரஸ் குறித்தும் அவ்வமைப்பின் பங்களிப்பாளர்களுள் ஒருவராக இருந்த கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த விபுலானந்தரின் பங்கு குறித்தும் இந்நூல் பேசுகின்றது… 0 0 0 “இந்நூல் வெளிக்கொணரப்பட்ட காலப்பகுதியில் அந்நிய நேரடி இராணுவத் தலையீட்டை எதிர்கொள்வதின் போதான பேரிழப்புகளின் பின்னால், தமிழீழ அரசு மீளவும் நிலைநிறுத்தப்பட்டிருந்தது. அந்நிய இராணுவத் தலையீடும் அதை வெற்றிகொள்ள புலிகள் இயக்கத்தால் கடைப்பிடிக்கப்பட்ட இராணுவ, அரசியல் வழிமுறைகளும், பல படிப்பினைகளை தமிழ் பேசும் மக்களுக்கும், புலிகள் இயக்கத்திற்கும் கொடுத்திருந்தன. இப் படிப்பினைகள், ஒன்றுக்கும் மேற்பட்ட இராணுவ மற்றும் அரசியல் சிந்தனைப்போக்குகளை தமிழ்பேசும் மக்களிடையேயும், புலிகள் இயக்கத்தினுள்ளும் தோற்றுவித்தன. புலிகள் இயக்கத்துள் ஆக்கபூர்வமான, சுமுகமான ஓர் உட்கட்சிப் போராட்டம் ஆரம்பமானது என்றும் கூறலாம். இது புலிகள் இயக்கத்திற்கு முற்றிலும் புதியதோர் மரபாகும். புலிகள் இயக்கமும் இதைப் புரிந்துகொண்டிருந்தது. மறு-பிறப்பெடுக்க முயற்சித்தது. அதற்கான வழிமுறைதான் மேற்குறிப்பிட்ட உட்கட்சிப் போராட்டமாகும். இம்முயற்சிகளின் வெளிப்பாடுகளில் ஒரு துளிதான் இந்நூல்.” -நூலாசிரியர் -அ.கௌரிகாந்தன்