book

பிரகீத்திற்காக எழும் சந்தியாவின் குரல்

Pirageethathirkaaga Elum Santhiyavin Kural

₹0+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஜேசுதாசன், சுனந்த தேசப்பிரிய
பதிப்பகம் :எழுநா வெளியீடு
Publisher :Ezhuna Veliyedu
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :
பதிப்பு :1
Published on :2013
Out of Stock
Add to Alert List

இத்தொகுப்பில் உள்ள கட்டுரைகள் ஊடக சுதந்திரம், கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம், தகவல் அறிந்து கொள்ளும் உரிமை என்பவற்றைப் பற்றிப் பேசுவதோடு மட்டுமல்லாது, அவற்றையும் தாண்டி ஜனநாயக விழுமியங்களின் வீழ்ச்சி குறித்தும், அறச்சாய்வு குறித்தும் கேள்வி எழுப்புகின்றன. போர்க்காலத்தில் கட்டியெழுப்பப்பட்ட போலியான தேசப்பற்றுக் குறித்த விமர்சனங்களை முன்வைக்கின்றன. ஊடகத்துறையின் போக்கும் நோக்கும் குறித்த மீள்பார்வையையும் சுயவிமர்சனத்தையும் கோருகின்றன. சுனந்த தேசப்பிரிய இலங்கையின் ஊடக சுதந்திரத்திற்காகக் குரல் கொடுத்து வரும் முக்கியமான குரல்களிலொன்று இவருடையது. 1990இல் இருந்து ஏறத்தாழப் பத்தாண்டுகள் யுக்திய (சமநீதி) என்கிற வாராந்தப் பத்திரிகையின் பிரதம ஆசிரியராகப் பணியாற்றியவர். இலங்கையின் சுதந்திர ஊடக அமைப்பின் ஆரம்ப கர்த்தாக்களுள் ஒருவராக இருந்தது மட்டுமன்றி அவ்வியக்கம் வளர்ந்து நிலைபெற தொடர்ச்சியாகப் பங்களித்து வருபவர். இலங்கை ஊடகக்கல்லூரி, இலங்கைப் பத்திரிகைப் பேரவை என்பனவற்றின் ஆரம்பத்திற்கும் ஊக்கியாகச் செயற்பட்டவர். மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் தொடர்ச்சியான உயிரச்சுறுத்தல் காரணமாக 2009ஆம் ஆண்டு நாட்டை விட்டு வெளியேறி அஞ்ஞாதவாசம் மேற்கொண்டு வருகிறார்