
நந்திபுரம்
₹100+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :குடவாயில் பாலசுப்பிரமணியன்
பதிப்பகம் :அன்னம் - அகரம்
Publisher :Annam - Agaram
புத்தக வகை :ஆய்வுக் கட்டுரைகள்
பக்கங்கள் :128
பதிப்பு :1
Published on :2016
Out of StockAdd to Alert List
பல்லவர் கலைக்கும், சோழர் கலைக்கும் என்ன தொடர்பு
என்பது ஓர் ஆராய்ச்சிக்குரிய பொருள். சிலர், பல்லவர் கலைக்கும், சோழர்
கலைக்கும் இல்லை, சோழர் கலை தனித்ததொரு காலை என வாதாடுகின்றனர். பல்லவர்
கலைதான் சோழர் கலைக்கு வித்திட்டது என்பது மாற்றுக் கருத்து.
தஞ்சைக்கருகில் பல்லவர்கலை எந்த அளவுக்குச் சோழர்காலத் தொடக்கத்தில்
இருந்தது என்று காட்ட குடவாயில் பாலசுப்பிரமணியன் அவர்கள் கண்டியூர்
மற்றும் அருகில் உள்ள ஊர்களுக்கும் சென்று கள ஆய்வு நடத்தி, பல
கல்வெட்டுகளை ஆய்ந்து, பல அறிய செய்திகள், கலைச்செல்வங்களை வெளிக்கொணர்ந்து
நம் கவனத்திற்கு கொண்டுவந்திருக்கிறார். இந்த ஆய்வின் பயனாக பண்டைய
நந்திபுரம் அரண்மனை இருந்த நந்திபுரம், ஆயிரத்தளி என்று பெயர்பெற்றது.
இப்பொழுது கண்டியூருக்கு அருகில் உள்ள வீரசிங்கம்பேட்டை என்றும், செங்கமேடு
என்று அழைக்கப்படும் பகுதிதான் என்று நிறுவியுள்ளார். இது வரலாற்று
சிறப்புமிக்க ஆய்வு. பண்டைய தலைநகராய்த் திகழ்ந்த நந்திபுரம் இதுதான் என
ஆதாரங்களுடன் நிறுவியுள்ளார். இது போன்ற கள ஆய்வுகள்தான் நமக்கு ஏராளமானவை
தேவை. பிராந்திய வரலாறுகளை செவ்வனே வகுக்கவும், அறிந்து கொள்ளவும் இவை
மிகவும் தேவை.
