book

உள்ளங்கையில் உடல் நலம்

₹199+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :நிழல்வண்ணன், டாக்டர் பி.எம். ஹெக்டே
பதிப்பகம் :வானவில் புத்தகாலயம்
Publisher :Vanavil Puthakalayam
புத்தக வகை :மருத்துவம்
பக்கங்கள் :176
பதிப்பு :1
ISBN :9789387369207
Out of Stock
Add to Alert List

'புகை, மது இவை உடல் நலத்திற்குக் கேடு விளைவிப்பவை என் - திரைப்படங்களிலும், அட்டைகளிலும் அச்சிட வலியுறுத்தும் எந்த - உற்பத்தியை நிறுத்தச் சொல்வதில்லை. ஏனென்றால் அதில் வருமானத்தை இழக்க அவர்கள் தயாராக இல்லை .'' 'ஜாகிங் போன்றவை நான்கு கால் பிராணிகளுக்கானவை. உண்மையில் ஜாகிங் தரும் எல்லாப் பயன்களையும் நடைப்பயிற்சியே தந்து விடுகிறது. ஆனால் உடற்பயிற்சி உபகரணங்கள் விற்கும் நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளை விற்பதற்காகச் சொல்லும் பொய்யை நம்பி இன்று ஊரே ஓடிக்கொண்டிருக்கிறது.' • 'மனநோய் உள்ளவர்கள் பொதுவாகக் குறைவாகத்தான் தூங்குவார்கள். அதை மறைத்து சரியாகத் தூங்காதவர்கள் மனநோயாளியாகி விடுவார்கள் என்று இவர்கள் சொல்வதில் உண்மை இல்லை. தூக்க மாத்திரை தயாரிக்கும் நிறுவனங்கள் ஆராய்ச்சி என்ற போர்வையில் திட்டமிட்டு பரப்பிவிட்ட கட்டுக்கதைகள் இவை.' • 'உயிரின் சாரம் கொழுப்புச் சத்தில்தான் உள்ளது. ஒருவர் ஒட்டுமொத்தமாகக் கொழுப்புச் சத்துள்ள உணவுகளைத் தவிர்த்து வந்தால், மிக விரைவில் முதுமை அடைந்துவிடுவார். ஏனென்றால் இதனால் உயிரணு (செல்) புதுப்பிக்கப்படுவது தடுக்கப்படுகிறது. நம் உடலில் உள்ள கொழுப்புச் சத்தின் அளவைக் குறைப்பதற்கான ஒரே வழி நம் பெற்றோர்களை நாம் மாற்றிக்கொள்வதுதான்!' |
''நமது சீதோஷ்ண நிலையைப் பொருத்தவரையில் நீரிழிவு நோயாளிகளுக்குக்
கோதுமையைவிட அரிசியே சிறந்த உணவு.' இவற்றையெல்லாம் சொன்னவர் யூட்யூப் பிரபலம் யாருமில்லை. நீண்ட நெடிய மருத்துவ அனுபவம் கொண்ட கார்டியாலஜிஸ்ட் மருத்துவ மற்றும் சமூகப் பங்களிப்பிற்கான நாட்டின் உயரிய அங்கீகாரமான பி.சி.ராய் விருது பெற்றவர் - பத்ம பூஷண் டாக்டர் பி.எம்.ஹெக்டே நவீன மருத்துவத்தின் அபத்தங்களையும், அபாயங்களையும் பற்றி டாக்டர் ஹெக்டே தொடர்ந்து குரல் எழுப்பி வருகிறார். ஆயுர்வேத மருத்துவம் மனிதகுலத்திற்கு எப்பேர்ப்பட்டதொரு அருட்கொடையாகத் திகழ்கிறது என்பதையும் சர்வாதிகார மனம் கொண்ட மேற்கத்திய நாடுகளால் இயக்கப்படும் பன்னாட்டு 'மருத்துவ மாஃபியா' நிறுவனங்கள் மூன்றாம் உலக நாடுகளின் மீது ஏவிவிடும் தவறான கற்பிதங்களையும், பரிசோதனைகளையும் போட்டுடைக்கும் இவரது காணொலி உரைகள் (Ted Talks) சமீபமாக சமூக வலைதளங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகின்றன. ஆங்கிலத்திலும், கன்னடத்திலும் உடல் நலம் சார்ந்த முக்கியமான நூல்களை இவர் தொடர்ந்து எழுதி வருகிறார். அவரது "How to maintain Good Health' என்ற நூலின் தமிழாக்கம் இது.