வேற்றுலகவாசியின் டயரிக் குறிப்புகள்
₹130+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சாரு நிவேதிதா
பதிப்பகம் :உயிர்மை பதிப்பகம்
Publisher :Uyirmmai Pathippagam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :144
பதிப்பு :1
Published on :2016
ISBN :9789385104268
Add to Cartவேற்றுலகவாசியின் டயரிக் குறிப்புகள் என்ற என் நூலை உங்களில் யாரும் படித்திருக்க வாய்ப்பே இல்லை. அதில் நேற்று முழுவதும் ஆழ்ந்து பிழைதிருத்தம் செய்து ஸீரோ டிகிரி பதிப்பகத்துக்குக் கொடுத்தேன். அதை ஏன் நீங்கள் படித்திருக்க வாய்ப்பில்லை என்று சொன்னேன் என்றால், அதில் உள்ள கட்டுரைகள் புதிய தலைமுறை இதழில் வந்தவை. நான் பொதுவாக ஒரு அச்சு இதழில் வந்ததை என் இணைய தளத்திலோ முகநூலிலோ பகிரும் வழக்கம் இல்லாதவன். உதாரணமாக, இப்போது குமுதத்தில் வரும் கட்டுரைகளை அவை வெளிவந்து ரெண்டு வாரம் ஆன பிறகும் கூட இங்கே பகிர்வதில்லை. குமுதத்தில் வந்தால் நீங்கள் குமுதத்தை வாங்கிப் படித்துக் கொள்ள வேண்டியதுதான் என்பது என் கட்சி. வெளிநாட்டில் வசிப்பவர்களும் ஆன்லைனில் குமுதத்தை வாங்கலாம் இல்லையா?
வேற்றுலகவாசியின் டயரிக் குறிப்புகள் தொகுப்பில் உள்ள சில கட்டுரைகளை வாசித்து நான் கண் கலங்கினேன். பல லட்சக்கணக்கான பேர் படிக்க வேண்டிய இக்கட்டுரைகள் சில நூறு பேரை மட்டுமே சென்றடைகிறதே என்ற வருத்தத்தினால் கலங்கவில்லை. அக்கட்டுரைகளில் தெரிந்த உருக்கமான சம்பவங்களே அதற்குக் காரணம். உதாரணமாக, ஒரு கதையை இங்கே தருகிறேன்.