நீச்சல் பயிற்சி
₹100+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :யூ. ஸோட்னிக்
பதிப்பகம் :தாமரை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட்
Publisher :Tamarai publications (p) ltd
புத்தக வகை :பொது
பக்கங்கள் :184
பதிப்பு :1
Published on :2008
குறிச்சொற்கள் :சிறுவர்கதைகள், நீதிபோதனைகள்
Add to Cartசிறார்களிடத்தில் கொண்ட எல்லையற்ற அன்பின் வெளிப்பாடு இந்தக் கதைகள். உங்கச் சிறார்களை தனக்குச் சமமான ஆசனத்தில் இருத்து, ரஷ்யாவின் சிறந்த எழுத்தாளர் பகிர்ந்துகொள்ளும் நலம் நாடும் பேருணர்வுகள். 1960ம் ஆண்டு ரஷ்யாவிலிருந்து தமிழில் அச்சிடப்பட்டு வெளிவந்தபோதிலும், இன்றளவும் சிறார் இலக்கியம் செல்லவேண்டிய சரியான திசைசுட்டும் உயர்ந்த நூல்களில் இதுவும் ஒன்று.
பெரியவர்கள் இக்கதைகளைப் படித்த பிறகு இன்னும் வாஞ்சையுடன் சிறார்களை நெருங்கிச் செல்வார்கள், அவர்களின் மன உலகத்தைக் கூடுதலாகப் புரிந்துகொள்வார்கள் என்றும் இந்நூலை வாசிக்கும் சிறார்கள் தாம் எதிர்கொள்ளும் வாழ்வில் புத்தம் புதிய பிரகாச வாயில்களைக் கண்டடைவார்கள் என்றும் நாங்கள் நம்புகின்றோம். இவை எளிமையானவை. அதே நேரம் சிறார் மனோதத்துவத்தின் அபூர்வமான நுட்பச் சித்திரங்களை காட்சிப்படுத்துபவை. சிறார்களாகட்டும் அல்லது பெரியவர்களாகட்டும். இந்நூலை படிக்கின்ற வாய்ப்பை இழப்பது வருத்தத்திற்குரியது.