
நாடி பரிசோதனை இவ்வளவுதான்!
₹36+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :Dr. சரவணன்
பதிப்பகம் :செட்டியார் பதிப்பகம்
Publisher :Chettiar Pathippagam
புத்தக வகை :மருத்துவம்
பக்கங்கள் :52
பதிப்பு :2
Published on :2017
Out of StockAdd to Alert List
நோயாளி சொல்லும் குறிகுணங்களைக் கொண்டு நோயை கணிக்க முடியும் என்றாலும், மிகச் சரியான சிகிச்சை முறை மற்றும் மருந்துகளை முடிவு செய்வதற்கு நோயாளியின் தேக நிலையை அறிவது அவசியம். அதாவது நோயாளி வாத உடலினரா அல்லது பித்த உடலினரா அல்லது கப உடலினரா அல்லது கலப்பு உடலினரா என்பதை தெரிந்த பிறகே பரிகார முறைகளையும், மருந்துகளையும் தீர்மானிக்க வேண்டும். இதனை அறிவதற்கு, செய்ய வேண்டிய அடிப்படை பரிசோதனைதான் ‘நாடி’. இந்த பரிசோதனையை செய்யாமல் சித்த மருத்துவம் செய்ய முடியாது, செய்யக்கூடாது.
‘நாடி’ பரிசோதனை அல்லது நாடியைப் பிடித்துப் பார்த்து நோயை கணிப்பது என்பதை சாதாரணமாக விளக்கிவிட முடியாது. ஆனாலும் அதைப் பற்றிய அறிமுகம் அனைவருக்கும் தேவை. ‘நாடி’ என்பதைப் பற்றி பேசாமல், சரியான சித்த மருத்துவ அறிமுகம் என்பதில் அர்த்தமில்லை.
