book

கவி காளமேகப்புலவரின் சித்திர மடல்

₹15+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :வன்மீக. வெங்கடாசலம்
பதிப்பகம் :சாந்தி நிலையம்
Publisher :Santhi Nilayam
புத்தக வகை :குறுநாவல்
பக்கங்கள் :80
பதிப்பு :1
Published on :2006
குறிச்சொற்கள் :2019 வெளியீடுகள்
Out of Stock
Add to Alert List

சித்திர மடல், மடல் என்னும் சிற்றிலக்கிய வகையைச் சேர்ந்த ஒரு தமிழ் நூல். இதனை இயற்றியவர் காளமேகப் புலவர்; காலம், 15ம் நூற்றாண்டு. இதில் 174 கண்ணிகளும், ஒரு காப்புச் செய்யுளும் உள்ளன. பிற்கால மடல் இலக்கியங்கள் போல பாட்டுடைத் தலைவனின் சிறப்பை விரித்துக் கூறாது இருப்பது இதன் தனிச்சிறப்பு. காதலில் ஏமாற்றம் உற்றவர் தம்மை வருத்திக்கொள்வதை விவரிக்கின்றது.

காளிதேவியின் அருளால் கவிபாடும் திறம்பெற்றுத் தமிழிலே கவி மழை பொழிந்த மாபெரும் கவி காளமேகம் ஆவார். இவரது இயற்பெயர் வரதன் என்பதாகும். காளமேகம் 15 ஆம் நுற்றாண்டில் வாழ்ந்த ஒரு தமிழ்ப் புலவர் ஆவார். வைணவ சமயத்தில் பிறந்த தனது சமயத்தை விட்டு சைவ சமயத்துக்கு மாறினார். ஆனாலும் இவர் பல சிறந்த நயம் மிகுந்த பாடல்களையும் பாடியுள்ளார். இவர் பாடிய சிலேடைப் பாடல்களும், நகைச் சுவைப் பாடல்களும் பல உள்ளன. சமயம் சார்ந்த நூல்களையும் இவர் இயற்றியுள்ளார். இவர் ஒரு ஆசு கவி ஆவார். ஆசுகவி எனப்படுவோர் எடுத்த மாத்திரத்திலே கவி பாடக்கூடிய திறமை படைத்த புலவர்களைக் குறிக்கும். திருவானைக்கா உலா, சரஸ்வதி மாலை, பரப்பிரம்ம விளக்கம், சித்திர மடல் முதலியவை இவர் இயற்றிய நூல்களாகும்.