book

கடல் வேந்தன்

₹300+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சாண்டில்யன்
பதிப்பகம் :பாரதி பதிப்பகம்
Publisher :Bharathi Pathippagam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :392
பதிப்பு :10
Published on :2017
குறிச்சொற்கள் :2019 வெளியீடுகள்
Out of Stock
Add to Alert List

ஆற்றங்கரைப் படகுத்துறையில் பல படகுகள் இருந்தபோதிலும் படகுக்காரர்கள் பலரும் தூங்கிக் கொண்டிருந்தார்கள். ஒரே ஒரு படகுக்காரன் மட்டும் சிறுவிளக்கு ஒன்றை வைத்துக்கொண்டு எதையோ படித்துக் கொண்டிருந்தான். அவனை அணுகிய சஞ்சயன், “டேய்! என்ன படிக்கிறாய்?” என்று அதட்டலாகக் கேட்டவுடன் லேசாகத் தலையைத் தூக்கிய படகோட்டி புன்முறுவல் செய்து “சேர நாட்டில் படிப்புக்கும் தடை உண்டா?” என்று அலட்சியமாகக் கேட்டான்.
“கேட்டதற்கு பதில் சொல்' என்ற சஞ்சயனை நோக்கி கண்களை உயர்த்திய படகோட்டி, “உங்களுக்கு இலக்கிய அறிவு உண்டா?” என்று வினவினான்.
“அதைப்பற்றி இப்பொழுதென்ன?” என்ற சஞ்சயன் குரல் சீற்றத்துடன் ஒலித்தது.
“கவிதை படிக்கிறேன். மகா கவி பரணர் இயற்றியது” என்றான் படகோட்டி.
சேரமன்னரின் இணைபிரியா நண்பரும் சங்க கால சிறப்புக் கவியுமான பரணர் பேரைச் சொன்னவுடன் சிறிது தலை தாழ்த்தினான் சஞ்சயன். சொன்னவன் படகோட்டி யாயிருந்தாலும்கூட, அடுத்து கேட்டான். “படகோட்டி! கவிதையைப் பிறகு படிக்கலாம். படகை விடுகிறாயா?” என்று.
“ஆகா விடுகிறேன்” என்ற படகோட்டி “தூதுவரே! ரோமாபுரி பொன் நாணயம் கொண்டு வந்திருக்கிறீரா?” என்று கேள்வி கேட்டான்.
பேரதிர்ச்சி அடைந்த சஞ்சயன் அவன் கடல் வேந்தன் ஆளாயிருக்க வேண்டுமென்று தீர்மானித்து, அவனை சிறை செய்தாலென்ன என்று முதலில் நினைத்தாலும் அந்த எண்ணத்தை மாற்றிக்கொண்டு கச்சையிலிருந்த பொன் நாணயத்தை எடுத்து படகோட்டியிடம் நீட்டினான்.
படகோட்டி அந்த நாணயத்தை வாங்கி தனது கச்சையில் செருகிக் கொண்டு படகுக்கு அருகே நீரில் நின்று கொண்டிருந்த சஞ்சயனை நோக்கி, “தூதுவரே! ஏறுங்கள் படகில்” என்றான்.
சஞ்சயன் சந்தேகத்துடன் கேட்டான். “எங்கே போக?” என்று.
“வில்லம்பு இலச்சினை இல்லத்திற்கு' என்று சகஜமாகச் சொன்ன படகோட்டி, சஞ்சயன் படகில் ஏறியதும் துடுப்பு களைக் கொண்டு படகைத் துழாவி செலுத்தினான்